ADVERTISEMENT

துபாய்: கார் கழுவுதல், என்ஜின் ஆயில் மாற்றம் போன்ற சேவைகளை இனி பார்க்கிங்கிலேயே அணுகலாம்!! ஒப்பந்தம் கையெழுத்து..!!

Published: 15 Jan 2025, 8:55 PM |
Updated: 15 Jan 2025, 8:55 PM |
Posted By: Menaka

அமீரக குடியிருப்பாளர்கள் துபாயில் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில், தங்கள் வாகனங்களுக்கான என்ஜின் ஆயில் மாற்றம், டயர் சோதனைகள், பேட்டரி ஆய்வுகள், கார் கழுவுதல் மற்றும் பிற அத்தியாவசிய வாகன பராமரிப்பு சேவைகள் உள்ளிட்ட சேவைகளை கூடிய விரைவில் அணுக முடியும் என்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் மதீனத் ஜுமைராவில் நடைபெற்று வரும், 10வது துபாய் சர்வதேச திட்ட மேலாண்மை மன்ற (DIPMF) கூட்டத்தில், துபாய் முழுவதும் பொது பார்க்கிங் இடங்களை நிர்வகிக்கும் PJSC நிறுவனமான பார்கின் (parkin) மற்றும் துபாய் அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான ENOC (எமிரேட்ஸ் நேஷனல் ஆயில் கம்பெனி குரூப்) ஆகியவற்றுக்கு இடையே இன்று புதன்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் Parkin மற்றும் Enoc இடையேயான இந்த கூட்டாண்மை ஒப்பந்தம், இரு நிறுவனங்களின் அந்தந்த மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் டிஜிட்டல் வாலட்களையும் ஒருங்கிணைக்கும் என்பதால், இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகன சேவைகளை இந்த தளங்களில் முன்பதிவு செய்ய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், இந்த ஒருங்கிணைப்பு ஒரு ஒருங்கிணைந்த மற்றும் பயனர் நட்பு டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதுடன் முன்பதிவு மேலாண்மை அம்சங்கள், நிகழ்நேர நிலை புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பான அப்ளிகேஷனில் கட்டண விருப்பங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்றும் பார்கின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த சேவைகள் எந்தெந்த பார்க்கிங் இடங்களில் கிடைக்கும் என்ற விபரங்களை பார்க்கின் நிறுவனம் இன்னும் வெளியிடாத நிலையில், தற்சமயம் வாகன ஓட்டிகளுக்கு எமிரேட் முழுவதும் உள்ள ஜூம் ஸ்டோர்களில் (zoom stores) இருந்து ஆன்-தி-கோ மூலம் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் வசதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

மற்ற எமிரேட்டுகளுக்கும் விரிவாக்கம்

பார்க்கின் நிறுவனம் தனது செயல்பாடுகளை தீவிரமாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்று செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய பார்கின் CEO முகமது அப்துல்லா அல் அலி, சவூதி சந்தையில் கட்டணம் செலுத்தும் பார்க்கிங் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக, சவுதியை தளமாகக் கொண்ட ஒரு முக்கிய நிறுவனத்துடன் விவாதித்து வருவதாக அறிவித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், மார்ச் 2025 முதல் துபாய் முழுவதும் பிரீமியம் பார்க்கிங் கட்டணங்கள் நடைமுறைக்கு வரும் என்று பார்கின் நிறுவனம் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel