அமீரக செய்திகள்

துபாய்: 3 நாட்களுக்குள் பார்க்கிங் கட்டணம் செலுத்தப்படாவிட்டால் 150 திர்ஹம்ஸ் அபராதம்..!!!

துபாயில் கடந்த ஆண்டு அக்டோபரில், புதிய கட்டண பார்க்கிங் முறையானது, சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மிர்டிஃப் மற்றும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் ஆகிய மூன்று மால்களில் செயல்படுத்தப்படும் என்று MAF (Majid Al Futtaim) அறிவித்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மால்கள் பதிவுசெய்யும் 20 மில்லியனுக்கும் அதிகமான கார்களுக்கான அணுகலை இந்த புதிய தடையற்ற பார்க்கிங் அமைப்பு (barrierless parking system) எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிப்ரவரி தொடக்கத்தில் மால் ஆஃப் எமிரேட்ஸ் ஷாப்பிங் மாலில் புதிய ‘பேரியர்லெஸ் பார்க்கிங்’ (barrierless parking) முறையை செயல்படுத்துவதற்காக பார்க்கிங் தடைகள் அகற்றப்பட்டு, சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பார்க்கின் நிறுவனம், டெவலப்பர் மஜித் அல் ஃபுத்தைம் (MAF) ப்ராப்பர்ட்டிஸ் ஆகியவை ஒன்றிணைந்து வழங்கக்கூடிய இந்த புதிய பார்க்கிங் சிஸ்டம் ஏற்கனவே சிட்டி சென்டர் தேராவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மால் ஆஃப் எமிரேட்ஸில் (MOE) வரும் பிப்ரவரி 3ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள இரண்டு பிரபலமான மால்களில் புதிய ‘பேரியர்லெஸ் பார்க்கிங்’ (barrierless parking) முறை செயல்படத் தொடங்கும் நிலையில், ஷாப்பிங் மையங்களை விட்டு வெளியேறிய மூன்று நாட்களுக்குப் பிறகு பார்க்கிங் கட்டணம் செலுத்தப்படாவிட்டால் 150 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பார்க்கின் அறிமுகப்படுத்தியுள்ள இந்த தடையற்ற பார்க்கிங் தொழில்நுட்பமானது, மாலுக்கு வரும் பார்வையாளர்கள் வாகன நிறுத்துமிடங்களுக்குள் நுழையும் போதும் அல்லது வெளியேறும் போதும் கட்டணத்தைச் செலுத்த தடைகளில் நின்று காத்திருக்க வேண்டிய தேவையை (barrierless parking) நீக்குகிறது.

அதாவது புதிய பார்க்கிங் அமைப்பில் இருக்கும் மேம்பட்ட கேமராக்கள் தானாகவே வாகனங்களின் உரிமத் தகடுகளைப் (license plates) படம்பிடித்து, ஒவ்வொரு வாகனத்தின் முன்னேற்றம் மற்றும் தங்கியிருக்கும் கால அளவைக் கண்காணிக்கும். மால்களில் உள்ள பார்க்கிங் பகுதிக்குள் ஓட்டுநர்கள் நுழையும்போது, ​​பார்க்கிங் கட்டணங்கள் குறித்த SMS அல்லது Parkin ஆப் நோட்டிபிகேஷன்களை அவர்கள் பெறுவார்கள். மேலும், பார்வையாளர்கள் எந்தவொரு கட்டணத்தையும் Parkin ஆப் அல்லது இணையதளம் மூலம் செலுத்தலாம்.

இந்த முறையில் பார்க்கிங் கட்டணம் மூன்று நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும், இல்லையெனில் 150 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று MOE இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி, “மாலில் இருந்து வெளியேறிய இரண்டு நாட்களுக்குள் நீங்கள் கட்டணம் செலுத்தவில்லை என்றால், நீங்கள் ஒரு SMS நினைவூட்டலையும் அடுத்த நாள் ஒரு தொலைபேசி அழைப்பையும் பெறுவீர்கள்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

பார்க்கிங் கட்டணம் குறித்த விபரங்கள்

புதிய முறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பார்க்கிங் கட்டணம் மாறாமல் இருக்கும் என்றும், மூன்று மால்களில் பார்க்கிங் கட்டணம் அப்படியே இருக்கும் என்றும் பார்கின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான தகவல்களின் படி, மால் ஆஃப் எமிரேட்ஸ் முதல் நான்கு மணிநேரங்களுக்கு தொடர்ந்து இலவசமாகவும், சிட்டி சென்டர் தேரா முதல் மூன்று மணி நேரம் இலவசமாகவும் பார்க்கிங் வசதியை வழங்குகின்றன. இதற்கிடையில், சிட்டி சென்டர் மீர்டிஃப் பார்க்கிங் இலவசமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஷாப்பிங் செய்பவர்கள் இலவச பார்க்கிங் நேரத்தை மீறியிருந்தால், மேலும் அங்குள்ள கடைகளில் ஒன்றில் பரிவர்த்தனை செய்தால், டிக்கெட்டை சரிபார்த்து கட்டணத்தில் தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை தவிர, வார விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பார்க்கிங் இலவசம் என்று கூறப்பட்டுள்ளது.

மால் ஆஃப் தி எமிரேட்ஸ் பார்க்கிங் கட்டணம்

நேரம் கட்டணம்
0-4 இலவசம்
4-5 20 திர்ஹம்ஸ்
5-6 40 திர்ஹம்ஸ்
6-7 60 திர்ஹம்ஸ்
7-8 100 திர்ஹம்ஸ்
8+ 150 திர்ஹம்ஸ்

சிட்டி சென்டர் தேரா

நேரம் கட்டணம்
0-3 இலவசம்
3-4 20 திர்ஹம்ஸ்
4-5 40 திர்ஹம்ஸ்
5-6 60 திர்ஹம்ஸ்
6-7 100 திர்ஹம்ஸ்
7+ 150 திர்ஹம்ஸ்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!