UAE: பிக் டிக்கெட் டிராவில் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்!! 10 ஆண்டு முயற்சிகளுக்குப் பிறகு 25 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசு…

அபுதாபியில் நடத்தப்பட்டு வரும் பிக் டிக்கெட் ராஃபிள் டிராவில் சுமார் 19 வருடங்களாக ஷார்ஜாவில் வசித்து வரும் இந்தியர் ஒருவர், சமீபத்திய டிராவில் கிராண்ட் பரிசான 25 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை வென்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஆஷிக் பதின்ஹரத் என்பவர் தான் அந்த அதிர்ஷடசாலி. 38 வயதான ஆஷிக்கின் குடும்பம் இந்தியாவில் இருக்கும் நிலையில், அவர் அமீரகத்தில் தனியாக வசித்து வருகிறார்.
பாதுகாப்புக் காவலராக பணிபுரிந்து வரும் அவர், கடந்த 10 ஆண்டுகளாக டிக்கெட் தனியாக வாங்கி வருவதாகவும், ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கிராண்ட் பரிசு வென்றது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கூறிய ஆஷிக், பரிசுத் தொகையில் முதலில் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க உள்ளதாகவும், மேலும் ரேஃபிள் தொடர்ந்து வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த டிராவில் முஹம்மது அல்சாரூனி என்ற அமீரக நாட்டவர் BMW M440i சொகுசு காரை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். பிக் டிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த பிப்ரவரியில், ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் 20 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசுடன் வெளியேறுவார். கிராண்ட் பரிசுடன் கூடுதலாக, பிக் டிக்கெட் வாடிக்கையாளர்களுக்கு வாராந்திர இ-டிராக்களில் 250,000 திர்ஹம்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வாரமும் இரண்டு அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தற்போது, பிக் வின் போட்டியின் ஸ்பின்-தி-வீல் கேம் மீண்டும் வந்துவிட்டது. அதன்படி, பிப்ரவரி 1 முதல் 23 வரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்க டிக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் நேரடி டிராவில் நுழைவதன் மூலம் 20,000 முதல் 150,000 திர்ஹம்ஸ் வரையிலான உத்தரவாதமான ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். உறுதிசெய்யப்பட்ட நான்கு பங்கேற்பாளர்களின் பெயர்கள் மார்ச் 1 ஆம் தேதி பிக் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரியின் ப்ரோமொஷனில் இரண்டு கண்கவர் ட்ரீம் கார் டிராக்கள் அடங்கும். மசராட்டி கிரேகேல் டிரா ஏப்ரல் 3 ஆம் தேதியும், ரேஞ்ச் ரோவர் வேலார் டிரா மார்ச் 3 ஆம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் www.bigticket.ae அல்லது சையத் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் அமைந்துள்ள கவுண்டர்களிலோ டிக்கெட்டுகளை வாங்கலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel