சவூதியில் தென்பட்ட பிறை.. நாளை துவங்கும் ரமலான்..!!

சவூதி அரேபியாவில் இன்று (பிப்ரவரி 28) வெள்ளிக்கிழமை ரமலான் மாத பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஷஃபான் மாதத்தின் கடைசி நாள் என்றும் நாளை மார்ச் 1 ம் தேதி (சனி) ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்றும் சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.
பொதுவாக இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம் ஆகும். இருப்பினும் இது பிறை பார்ப்பதின் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும். இந்த நிலையில் இன்று பிறை பார்க்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகள் சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால் அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் நாளை ரமலான் முதல் நாளாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel