ADVERTISEMENT

ஏழைகளின் மருத்துவ உதவிக்காக ‘Fathers’ Endowment’ என்ற புதிய தொண்டு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்திய துபாய் ஆட்சியாளர்!!

Published: 21 Feb 2025, 7:18 PM |
Updated: 21 Feb 2025, 7:20 PM |
Posted By: Menaka

இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் நெருங்கி வரும் நிலையில், ​​ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், ‘Fathers’ Endowment’ என்ற புதிய தொண்டு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்துவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இந்த முயற்சி அமீரகத்தின் வருடாந்திர ரமலான் தொண்டு பிரச்சாரங்களின் ஒரு பகுதியாகும்.

ADVERTISEMENT

இந்த முன்முயற்சி, 1 பில்லியன் திர்ஹம்ஸ்  மதிப்புள்ள ஒரு நிலையான தொண்டு நிதியை திரட்டுவதன் மூலம் தந்தையர்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதிலிருந்து திரட்டப்பட்ட பணம், ஏழைகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சிகிச்சையை வழங்க உதவுவதோடு, மருத்துவம் மற்றும் சிகிச்சையை வழங்குவதன் மூலம் மருத்துவமனைகள் போன்ற சுகாதார அமைப்புகளின் வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து X தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்த துபாய் ஆட்சியாளர், “தந்தையர்களே நமக்கு முதல் முன்மாதிரி, முதல் ஆதரவு மற்றும் முதல் ஆசிரியர். அவர்கள் இளமையிலும் முதுமையிலும் நம் வாழ்வில் வலிமை, அறிவு மற்றும் பாதுகாப்பின் ஆதாரமாக இருக்கிறார்கள்” என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு தனது செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த பிரச்சாரம் குடும்பப் பிணைப்புகள் மற்றும் சமூக ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக அமீரகத் தலைவர் ஷேக் முகமதுவால் தொடங்கப்பட்ட ‘Year of Community’ உடன் ஒத்துப்போகிறது. கடந்த ஆண்டு, ஷேக் முகமது  ‘Mother’s endowment’  என்ற இதேபோன்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார். முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகளின் (MBRGI) கீழ் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரம் ஏழைகளையும் அடித்தட்டு சமூகங்களையும் ஆதரிப்பதற்காக 1.4 பில்லியன் திர்ஹம்ஸ் நிதியை திரட்டி, இந்த நிதி கல்வி மற்றும் பிற தொண்டு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய இந்த பிரச்சாரமும் MBRGI இன் ஒரு பகுதியாகும். MBRGI இதுவரை 2020 ஆம் ஆண்டில் ’10 மில்லியன் உணவு’, 2021 ஆம் ஆண்டில் ‘100 மில்லியன் உணவு’, 2023 இல் ‘1 பில்லியன் உணவு எண்டோவ்மென்ட்’ என கடந்த காலங்களில் வெற்றிகரமான பிரச்சாரங்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரச்சாரங்களின் குறிக்கோள், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதும் சமூகங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும். இந்த முக்கியமான தொண்டு பணிகளைத் தொடர்வதற்கான மற்றொரு படியாக ‘Fathers Endowment’ பிரச்சாரம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel