துபாய்: ஈத் அல் ஃபித்ருக்கான நேரங்களை நீட்டித்த குளோபல் வில்லேஜ்..!! வானவேடிக்கை, லைவ் ஷோ என கொண்டாட்டங்கள் தயார்..!!

துபாயில் குடும்ப பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் ஆகியவற்றிற்கான பிரபலமான இடமான குளோபல் வில்லேஜ், ஈத் அல் ஃபித்ருக்கான நீட்டிக்கப்பட்ட நேரங்கள் மற்றும் சிறப்பு வானவேடிக்கை நிகழ்ச்சிகளை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக குளோபல் வில்லேஜ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, ஷவ்வால் 1 முதல் ஷவ்வால் 3 வரை மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை குளோபல் வில்லேஜ் திறந்திருக்கும் மற்றும் மார்ச் 28 முதல் ஏப்ரல் 6 வரை, பார்வையாளர்கள் ஈத் சிறப்பு கொண்டாட்டங்களை அனுபவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் பொழுதுபோக்கு வரிசையில் நேரடி நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவை பிரதான மேடையில் இடம்பெறும். மேலும், கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக, மார்ச் 28 முதல் ஏப்ரல் 5, 2025 வரை தினமும் இரவு அற்புதமான ஒன்பது ஈத் வானவேடிக்கைகள் இருக்கும். இந்த வானவேடிக்கைகள் ரமலான் இரவுகளில் இரவு 10 மணிக்குத் நடத்தப்படும் மற்றும் ஈத் முதல் நாளில் இரவு 9 மணிக்குத் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாணவேடிக்கைகள் குளோபல் வில்லேஜ் சீசன் 29 இன் மிக நீளமான வான வேடிக்கையாகவும் மற்றும் அனைவரும் ரசிக்க ஒரு கண்கவர் நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel