ADVERTISEMENT

ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய்.. எப்போது..??

Published: 29 Mar 2025, 7:54 AM |
Updated: 29 Mar 2025, 8:00 AM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), வரவிருக்கும் ஈத் அல்-ஃபித்ர் விடுமுறையின் போது குடியிருப்பாளர்கள் அனைவரும் சிரமம் இல்லாமல் ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை கொண்டாடும் விதமாக, (RTA) பார்க்கிங் மற்றும் குறிப்பிட்ட சேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மற்றும் வாகன சோதனை மையங்கள் (தொழில்நுட்ப ஆய்வு) ஆகியவை இந்த சேவைகளில் அடங்கும்.

ADVERTISEMENT

RTA அறிவித்துள்ளதன்படி ஈத் விடுமுறை காலத்தில் துபாய் முழுவதும் பல நிலை பார்க்கிங் முனையங்களைத் (multi-level parking terminal) தவிர, பொது பார்க்கிங் இடங்களை இலவசமாக அணுகலாம். இலவச பார்க்கிங் வசதி ஷவ்வால் மாதம் 1 (ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள்) முதல் 3 வரை கிடைக்கும். கட்டண பார்க்கிங் ஷவ்வால் 4 அன்று மீண்டும் தொடங்கும் என்பதை ஓட்டுநர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாகன சோதனை மையங்கள்

எமிரேட்டில் உள்ள வாகன சோதனை மையங்கள் ஷவ்வால் 1 முதல் 3 வரை ஈத் கொண்டாட்டங்களுக்காக மூடப்படும். வழக்கமான செயல்பாடுகள் ஷவ்வால் 4 அன்று மீண்டும் தொடங்கும்.

ADVERTISEMENT

வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களும் அதே காலகட்டத்தில் மூடப்பட்டிருக்கும், அதே நேரத்தில் உம் ரமூல், தேரா, அல் பர்ஷா, அல் கிஃபாஃப் மற்றும் RTA தலைமையகங்களில் உள்ள ஸ்மார்ட் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் வழக்கம் போல் 24/7 இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT