ADVERTISEMENT

அமீரகத்தில் 2 வயது குழந்தையுடன் 17வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்தியப் பெண்..!!

Published: 22 Apr 2025, 3:08 PM |
Updated: 22 Apr 2025, 3:16 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து விழுந்து தாய் மற்றும் மகள் இருவரும் உயிரிழந்துள்ள சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று ஷார்ஜாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 17வது தளத்தின் பால்கனியில் இருந்து விழுந்து 33 வயது இந்தியப் பெண்ணும் அவரது இரண்டு வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாலை 4:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

இச்சம்பவத்தை நேரில் கண்ட நபர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு புறப்பட்ட போலீஸ் ரோந்துப் படையினருடன், புஹைரா காவல் நிலையத்தைச் சேர்ந்த CID அதிகாரிகள், தடயவியல் குழுக்கள் மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் ஆகியவற்றை சேர்ந்த பணியாளர்கள் விரைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அவரது மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் படுகாயமடைந்த அவரது மகள் துரதிர்ஷ்டவசமாக, சுமார் ஒரு மணி நேர தீவிர சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

அதையடுத்து, காவல்துறை ஆதிகாரிகள் தாய் , மகள் இருவரின் உடல்களை மருத்துவமனைக்கும் பின்னர் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கும் மாற்றியுள்ளனர். காவல்துறையின் ஆரம்ப அறிக்கைகளில், பால்கனியில் இருந்து விழுந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் கணவர் அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த வழக்கு தற்கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, அதிகாரிகள் இந்த வழக்கை மேலதிக விசாரணைக்காக பொது வழக்கு துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT