ADVERTISEMENT

துபாய்: 4 மாத மூடலுக்குப் பிறகு மீண்டும் IMAX தியேட்டர்களை திறக்கும் VOX சினிமாஸ்..!!

Published: 1 Apr 2025, 9:21 AM |
Updated: 1 Apr 2025, 9:53 AM |
Posted By: Menaka

துபாயின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான ஷாப்பிங் மால்களில் ஒன்றான மால் ஆஃப் தி எமிரேட்ஸில் உள்ள ஐமேக்ஸ் (IMAX) திரையரங்கம் நான்கு மாத மூடலுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்பதை வோக்ஸ் சினிமாஸ் (Vox Cinemas) உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஒரு பெரிய மேம்படுத்தலுக்காக கடந்த ஆண்டின் இறுதியில் மூடப்பட்ட இந்த திரையரங்கம் இப்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது துபாயில் உள்ள சினிமா பிரியர்களுக்கு அதிநவீன சினிமா அனுபவத்தை வழங்கும் என்று VOX சினிமாஸ் நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட சினிமா அனுபவம்

புதிதாக மேம்படுத்தப்பட்ட IMAX தியேட்டர் தெள்ளத் தெளிவான காட்சிகள் (crystal-clear visuals), அடுத்த தலைமுறை ஒலி அமைப்பு (next-generation sound) மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் (cutting-edge technology) போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்த மேம்பாடுகள் திரைப்பட அனுபவத்தை உயர்த்தவும், பார்வையாளர்களுக்கு மிகவும் கண்கவர் பார்வை சூழலை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்காலிக மாற்றுகள்

மால் ஆஃப் தி எமிரேட்ஸில் உள்ள ஐமேக்ஸ் மூடப்பட்டிருந்தாலும், திரைப்பட பார்வையாளர்கள் VOX சினிமாஸின் பிற இடங்களில் படங்களை ரசிக்கலாம். அதாவது சிட்டி சென்டர் மிர்டிஃப், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மற்றும் அபுதாபியில் உள்ள அல் மரியா ஐலேண்ட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள IMAX தியேட்டர்களில் கண்டு ரசிக்கலாம்.

டிக்கெட் விலைகள்

IMAX திரையரங்குகள், மற்ற நிலையான திரையரங்குகளிலிருந்து (standard theaters) முதன்மையாக அவற்றின் பெரிய, வளைந்த திரைகள் மற்றும் மேம்பட்ட ப்ரொஜெக்ஷன் அமைப்புகள் மூலம் வேறுபடுகின்றன. எனவே, ஐமேக்ஸ் டிக்கெட்டுகள் 60 திர்ஹம் முதல் 80 திர்ஹம் வரை இருக்கும். அதேபோன்று குறைந்தபட்ச டிக்கெட்டுகளின் விலை 46 திர்ஹம்ஸ் ஆகும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel