ADVERTISEMENT

புர்ஜ் கலீஃபா லைட் ஷோவை வடிவமைக்க சிறந்த வாய்ப்பு: வெற்றி பெற்றவர்கள் 100,000 திர்ஹம்ஸ் பரிசையும் பெறலாம்..

Published: 8 May 2025, 4:38 PM |
Updated: 8 May 2025, 5:08 PM |
Posted By: Menaka

அமீரகக் குடியிருப்பாளர்கள் இப்போது உலகின் மிக உயரமான கட்டிடத்திற்கான ஒரு சிறந்த காட்சி அமைப்பை (projection ) வடிவமைக்க ஓர் அரிய வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல் சிறந்த வடிவமைப்பாளருக்கு 100,000 திர்ஹம்ஸ் பரிசை வெல்லவும் வாய்ப்பு உள்ளது. அதாவது துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் முகப்பில் காட்சிப்படுத்தப்படும் திட்ட வடிவமைப்புகளை சமர்ப்பிக்க கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கான திறந்த அழைப்பை எமிராட்டி ரியல் எஸ்டேட் டெவலப்பரான Emaar அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக எமார் வெளியிட்ட அறிக்கையில், மே 6 முதல் 26 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. இது பங்கேற்பாளர்கள் துபாயின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றின் மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு தங்கள் தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது.

சமர்ப்பிக்க வேண்டியவை:

  • மூன்று நிமிட அசல் ப்ரொஜெக்ஷன் வீடியோ அல்லது அனிமேஷன்
  • காட்சிகள் புதுமை, படைப்பாற்றல் மற்றும் துபாயின் உணர்வை பிரதிபலிக்க வேண்டும்
  • புர்ஜ் கலீஃபாவின் மேம்பட்ட ப்ரொஜெக்ஷன் அமைப்புடன் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதிசெய்ய குறிப்பிட்ட தொழில்நுட்பத் தேவைகளுக்கு இணங்க வேண்டும். வடிவம் மற்றும் மேப்பிங் வழிகாட்டுதல்கள் உட்பட முழு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் புர்ஜ் கலீஃபா வலைத்தளத்தில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • உங்கள் வடிவமைப்பை (opencall@emaar.ae) என்ற இமெயிலில் சமர்ப்பிக்கவும்
  • உங்கள் வடிவமைப்பின் உத்வேகம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள கதையை விளக்கும் ஒரு சிறிய கருத்து விளக்கத்தைச் சேர்த்து அனுப்பவும்.

இறுதியாக வெற்றி பெற்றவர்களின் வடிவமைப்பு புர்ஜ் கலீஃபாவின் புதிய மேம்படுத்தப்பட்ட முகப்பு விளக்குகளுடன் பிரம்மாண்டமாக  காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட காட்சி அமைப்பின் மூலம் டிசம்பர் 1, 2024 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஈத் அல் எதிஹாத் கொண்டாட்டங்களின் போதும், மேலும் ஜனவரி 4, 2025 அன்று புர்ஜ் கலீஃபாவின் 15 வது ஆண்டு கொண்டாட்டத்தின் போதும் நிகழ்த்தபோட்ட. இந்த முயற்சி அனைத்து பின்னணியிலிருந்தும் படைப்பு திறமையாளர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று எமார் நிறுவனர் முகமது அலப்பார் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel