அமீரக செய்திகள்

துபாய் டூட்டி ஃப்ரீ டிரா: இந்தியருக்கு இரண்டாவது முறையாக கிடைத்த 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை..!!

துபாயைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் ப்ரோமோஷனில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமீபத்திய துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் ப்ரோமோஷனில் அவருக்கு இரண்டாவது முறையாக 1 மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 60 வயதான பால் ஜோஸ் மாவேலி என்பவர், மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 503 இல் டிக்கெட் எண் 3532 உடன் பரிசை வென்றுள்ளார், அதை அவர் மே 19 அன்று ஆன்லைனில் வாங்கியதாக துபாய் டூட்டி ஃப்ரீ (DDF) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 38 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் மாவேலி, கடந்த நவம்பர் 2016 இல் இதே பரிசை வென்றிருந்தார், இது DDF வரலாற்றில் இரண்டு முறை வென்ற 11வது நபராக அவரை மாற்றியுள்ளது. தனது முதல் வெற்றியின போது, டிக்கெட் விலை மற்றும் பரிசு இரண்டையும் ஒன்பது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட அவர், இந்த முறை 17 நண்பர்களுடன் பரிசுத்தொகையை பிரித்துக் கொள்ளவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் 1999 முதல் டிக்கெட்டுகளில் நண்பர்களின் பெயர்களை மாற்றி புரோமோஷனில் பங்கேற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையும் ஒரு சிறிய ஒப்பந்த நிறுவனத்தில் தள மேற்பார்வையாளருமான மேவ்லி, இந்த எதிர்பாராத வெற்றிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். இதற்கிடையில், சவுதி அரேபியாவில் வசிக்கும் பாகிஸ்தானியரான கிரண் பட்டுல், சீரிஸ் 502 இல் 2252 என்ற டிக்கெட் எண்ணுடன் $1 மில்லியன் மதிப்புள்ள மற்றொரு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மே 5 அன்று ஆன்லைனில் வாங்கிய டிக்கெட்டுக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. 1999 இல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த டிராவில் வெற்றி பெற்ற 27வது பாகிஸ்தானியர் படூல் ஆவார்.

இந்த மில்லியன் டாலர் வெற்றி பரிசுத்தொகைகளுடன் கூடுதலாக, மேலும் இரண்டு அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர்கள் ‘Finest Surprise’ டிராவில் சொகுசு வாகனங்களை வென்றுள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் ரெட்டிச், 0939 என்ற டிக்கெட் எண்ணுடன் BMW 740i M ஸ்போர்ட்டையும், ஈரானியரான ஃபத்தோல்லா முஸ்தபா மொக்தார், 0043 என்ற டிக்கெட் எண்ணுடன் BMW F 900 XR மோட்டார் சைக்கிளையும் வென்றுள்ளனர். துபாய் சர்வதேச விமான நிலையத்தின் கான்கோர்ஸ் B இல், மூத்த துபாய் டியூட்டி ஃப்ரீ நிர்வாகிகள் முன்னிலையில் இந்த டிரா நடந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!