ADVERTISEMENT

துபாயில் புதிய கட்டண பார்க்கிங் மண்டலம் அறிமுகம்: கட்டணங்கள், நேரங்கள் பற்றிய விபரங்கள் வெளியீடு…

Published: 26 May 2025, 8:00 PM |
Updated: 26 May 2025, 9:24 PM |
Posted By: Menaka

துபாய் எமிரேட்டின் பொது பார்க்கிங் ஆபரேட்டரான பார்கின் (parkin) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கட்டண பொது பார்க்கிங் மண்டலங்களை செயல்படுத்தும் துபாயின் சமீபத்திய சுற்றுப்புறமாக மிர்டிஃப் மாறியுள்ளது. புதிய மண்டலங்களான 251C (ஆன்-ஸ்ட்ரீட்) மற்றும் 251D (ஆஃப்-ஸ்ட்ரீட்) ஆகியவை மே 26 திங்கள் முதல் துபாயின் மாறுபட்ட பார்க்கிங் கட்டணக் கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கும்.

ADVERTISEMENT

மிர்டிஃபில் பார்க்கிங் கட்டணங்கள்:

மண்டலம் 251C (ஆன்-ஸ்ட்ரீட்)

நெரிசல் இல்லாத நேரங்கள்:

ADVERTISEMENT
  • ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹம்
  • 4 மணி நேரத்திற்கு 11 திர்ஹம்

நெரிசலான நேரங்கள்:

  • 1 மணிநேரத்திற்கு 4 திர்ஹம்
  • 4 மணி நேரத்திற்கு 16 திர்ஹம்

மண்டலம் 251D

ADVERTISEMENT

நெரிசல் இல்லாத நேரங்கள்:

  • ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹம்

பீக் நேரங்கள்:

  • ஒரு மணி நேரத்திற்கு 4 திர்ஹம்

24 மணி நேர கட்டணம்:

  • 20 திர்ஹம் நிலையான கட்டணம்

துபாயில் பொது பார்க்கிங் நேரம்:

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டண பார்க்கிங் பொருந்தும். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் பார்க்கிங் இலவசம்.

பீக் மற்றும் ஆஃப்-பீக் நேரங்கள்

  • போக்குவரத்து அதிகமுள்ள பீக் நேரங்கள்: காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
  • நெரிசல் இல்லாத நேரங்கள்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை

பார்க்கிங் சந்தா சேவைகள்:

பார்க்கின் நிறுவனம் சமீபத்தில் அதன் சந்தா சேவையை அனைத்து நிர்வகிக்கப்பட்ட பகுதிகளிலும் விரிவுபடுத்தியது, சிலிக்கான் ஒயாசிஸ், துபாய் ஹில்ஸ் போன்ற அதிக மக்கள் அடர்த்தி கொண்ட சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுக்கும், கராமா, அல் குசைஸ் மற்றும் அல் கிஃபாஃப் உள்ளிட்ட வாஸ்ல் ரியல் எஸ்டேட் சமூகங்களுக்கும் வசதியான சந்தா விருப்பங்களை வழங்குகிறது.

இந்தப் புதிய அமைப்பு பிரபலமான குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் பார்க்கிங் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதையும் ஒட்டுமொத்த போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel