ADVERTISEMENT

ஈத் அல் அதாவை முன்னிட்டு பொது பூங்காக்களுக்கான புதுப்பிக்கப்பட்ட நேரங்களை அறிவித்த துபாய்!!

Published: 4 Jun 2025, 9:08 PM |
Updated: 4 Jun 2025, 9:13 PM |
Posted By: Menaka

ஈத் அல் அதா நெருங்கி வருவதால், துபாய் முனிசிபாலிட்டி விடுமுறை காலத்தில் நகரம் முழுவதும் உள்ள பொது பூங்காக்களுக்கான புதுப்பிக்கப்பட்ட நேரங்களை அறிவித்துள்ளது. “தியாகத்தின் பண்டிகை” என்றும் அழைக்கப்படும் ஈத் அல் அதாவிற்காக, குடும்பங்கள் தங்கள் கொண்டாட்டங்களைத் திட்டமிடுவதால், துபாய் முழுவதும் உள்ள பொது பூங்காக்கள் பார்வையாளர்களை வரவேற்க நீட்டிக்கப்பட்ட நேரங்களுடன் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈத் விடுமுறையின் போது புதுப்பிக்கப்பட்ட பூங்கா நேரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

பொது பூங்கா நேரங்கள்

அனைத்து துபாய் பூங்காக்களும் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பூங்காக்கள் (காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்)

ADVERTISEMENT
  • ஜபீல் பார்க்
  • க்ரீக் பார்க்
  • அல் மம்சார் பார்க்
  • அல் சஃபா பார்க்
  • முஷ்ரிஃப் பார்க்

முஷ்ரிஃப் பார்க்கில் உள்ள மலை பைக் பாதை (mountain bike track) மற்றும் நடைபாதை: அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்

சில்ட்ரேன்ஸ் சிட்டி (க்ரீக் பார்க்)

ADVERTISEMENT
  • திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
  • சனி மற்றும் ஞாயிறு: பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை

குர்ஆனிக் பார்க் 

  • பூங்கா: காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
  • கேவ் ஆஃப் மிராக்கில்ஸ் (cave of miracles) & கிளாஸ் ஹவுஸ்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

அத்துடன், ஈத் விடுமுறையின் போது ஜுமேரா 2, ஜுமேரா 3, உம் சுகீம் 1, மற்றும் உம் சுகீம் 2 ஆகிய நான்கு கடற்கரைகளையும் குடும்பங்களுக்கு ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், துபாய் முழுவதும் ஜூன் 5 முதல் 8 வரை பொது பார்க்கிங் இலவசம் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel