அமீரக செய்திகள்

UAE: இந்தியா உள்ளிட்ட முக்கிய பண பரிவர்த்தனை நாடுகளுக்கு புதிய கட்டணம் பொருந்தாது.. எமிரேட்ஸ் NBD விளக்கம்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட முக்கியமான பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் நாடுகளுக்கு சர்வதேச பணப் பரிமாற்றங்களுக்கான அதன் பிரபலமான நேரடி பணப் பரிமாற்ற சேவையானது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இலவசமாக இருக்கும் என்று எமிரேட்ஸ் NBD தெளிவுபடுத்தியுள்ளது. செப்டம்பர் 1, 2025 முதல் DirectRemit வழியாக அனுப்பப்படும் அனைத்து சர்வதேச பணப் பரிமாற்றங்களுக்கும் 26.25 திர்ஹம்ஸ் பரிமாற்றக் கட்டணம் பொருந்தும் என்று வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து வாடிக்கையாளர் மத்தியில் கவலைகள் எழுந்தது. இந்த நிலையில் எமிரேட்ஸ் NBD இந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “இந்தியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் ஃபிலிப்பைன்ஸ் போன்ற முக்கிய நாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு எமிரேட்ஸ் NBD 26 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்காது. இந்த வழித்தடங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே இருக்கும். மத்திய வங்கி விதிமுறைகளின்படி, மற்ற நாடுகளுக்கு மட்டுமே புதிய கட்டணம் பொருந்தும்.” என்று விளக்கமளித்துள்ளது.

VAT வரி உட்பட 26.25 திர்ஹம்ஸ் கட்டணம் நாடுகளுக்கு இடையே செய்யப்படும் சர்வதேச பரிமாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் ஆன்லைன் வங்கி, மொபைல் செயலி அல்லது ENBD X டிஜிட்டல் சேனல்கள் மூலம் நடத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேரடி மின்னஞ்சல்களை அனுப்புவதையும் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் விரிவான தெளிவுபடுத்தலுக்காக திங்களன்று முறையான செய்திக்குறிப்பை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.

UAE வங்கிகள் வழியாக சர்வதேச பரிமாற்றங்கள் பொதுவாக சேருமிடத்தைப் பொறுத்து 20 திர்ஹம்ஸ் முதல் 60 திர்ஹம்ஸ் வரை கட்டணங்களை விதிக்கும் அதே வேளையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு எமிரேட்ஸ் NBD இன் பூஜ்ஜிய-கட்டண DirectRemit சேவை மாறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!