துபாய்: அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை.. பயண ஆலோசனையை வெளியிட்ட எமிரேட்ஸ் நிறுவனம்!!

துபாயைத் தளமாகக் கொண்டு செயல்படும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் பரபரப்பான கோடை பயண சீசனுக்கு தயாராகி வருவதாகவும், ஜூன் 26 முதல் ஜூன் 30 வரை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) இருந்து தினமும் 30,000க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் சமீபத்திய புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், எமிரேட்ஸ் வலுவான பயண தேவையை அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த இரண்டு வாரங்களில், 1.2 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
புவிசார் அரசியல் மாற்றங்கள் காரணமாக, சில உலகளாவிய விமான நிறுவனங்கள் விமான தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களை எதிர்கொண்டாலும், சில பயணிகள் பாதிக்கப்பட்ட வழிகளைத் தவிர்க்க திட்டங்களை மாற்றியிருந்தாலும், எமிரேட்ஸ் செயல்பாடுகள் நிலையானதாக இருப்பதை உறுதிப்படுத்தியது. பரபரப்பான பயணக் காலத்தில் தாமதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுமாறு விமான நிறுவனம் இப்போது பயணிகளை அறிவுறுத்துகிறது.
எமிரேட்ஸின் பயண ஆலோசனைகள்
- சீக்கிரமாக வந்து சேருங்கள்: டெர்மினல் 3 இலிருந்து பயணிக்கும் பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்தை அடைய வேண்டும்.
- இமிக்ரேஷனை சீக்கிரமாக முடிக்கவும்: உங்கள் விமானத்திற்கு குறைந்தது 1.5 மணி நேரத்திற்கு முன் இமிக்ரேஷனை சீக்கிரமாக முடிக்க முயற்சிக்கவும்.
- போர்டிங் கேட்: புறப்படுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே கேட் வாயிலில் இருங்கள்.
நேரத்தை மிச்சப்படுத்தும் சேவைகள்:
- ஆன்லைன் செக்-இன்: எமிரேட்ஸ் செயலியைப் பயன்படுத்தி செக்-இன் செய்யவும், முன்பதிவுகளை நிர்வகிக்கவும், டிஜிட்டல் போர்டிங் பாஸ்களைப் பெறவும் முடியும். புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு செக்-இன் தொடங்கும்.
- ஒவர்நைட் பேக் டிராப்: உங்கள் விமானத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு (அமெரிக்க விமானங்களுக்கு 12 மணிநேரம்) டெர்மினல் 3 இல் லக்கேஜ்களை டிராப் செய்யவும்.
- சிட்டி செக்-இன் (DIFC): காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் வரை எமிரேட்ஸ் சிட்டி செக்-இன் மற்றும் டிராவல் ஸ்டோரில் செக்-இன் மற்றும் டிராவல் பைகளை டிராப் செய்யவும்.
- ஹோம் செக்-இன்: துபாய் மற்றும் ஷார்ஜாவில் முதல் வகுப்பு மற்றும் பிளாட்டினம் ஸ்கைவர்ட்ஸ் உறுப்பினர்களுக்கு கிடைக்கிறது.
விமான நிலையத்தில் கிடைக்கும் சேவைகள்:
- இலவச ட்ரைன் மற்றும் ஷட்டில் பேருந்து சேவைகள் பயணிகள் டெர்மினல் 3 இல் உள்ள concourse -களுக்கு இடையில் செல்ல உதவுகின்றன. மேலும் முதல் வகுப்பு பயணிகள், வயதான பயணிகள், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பிரத்யேக எலெக்ட்ரிக் வண்டிகள் கிடைக்கின்றன
பயணிகளுக்கு பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்று எமிரேட்ஸ் உறுதியளித்தது, மேலும் சீரான மற்றும் பாதுகாப்பான செயல்பாடுகளைப் பராமரிக்கும் அதே வேளையில் பிராந்திய முன்னேற்றங்களை நெருக்கமாகக் கண்காணிப்பதாகவும் கூறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel