சவுதி அரேபியா: ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் இந்தியர் உயிரிழந்த சோகம்!!

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் (air conditioner compressor) வெடித்ததில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் தொடுபுழாவின் ரண்டுபாலத்தைச் சேர்ந்தவரும், மஞ்சலியில் நீண்டகாலமாக வசிப்பவருமான ஜியாத் பஷீர், கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரு சவுதி குடும்பத்திற்கு ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஏசி கம்ப்ரசர் திடீரென வெடித்து பலத்த தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ரியாத்தில் உள்ள எக்ஸிட் 9 அருகே உள்ள அல் மௌவாசத் மருத்துவமனைக்கு ஜியாத் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தொடர்ந்து இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:10 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
உடனடியாக, மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு மாற்றப்பட்ட அவரது உடல், திங்கட்கிழமை மதியம் ரியாத்தில் உள்ள நசீம் அல் சலாம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மனைவி மற்றும் மகள் கேரளாவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel