அமீரக செய்திகள்

ஈரான்-இஸ்ரேல் மோதல்: பிராந்தியத்தில் அமைதியை வலியுறுத்தும் அமீரகம்!!

அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், சமீபத்திய இஸ்ரேலிய ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுடன் (Masoud Pezeshkian) தொலைபேசியில் பேசியபோது, பிராந்தியத்தில் பதட்டத்தைத் தணிப்பதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலைப்பாட்டை ஷேக் முகமது மீண்டும் உறுதிப்படுத்தியதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், இரு தலைவர்களும் தற்போதைய மோதல் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தும் கடுமையான அபாயங்கள் குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகின்றது.

பிராந்திய பதட்டங்களைத் தணிக்கவும் மேலும் மோதல் அதிகரிப்பதைத் தடுக்கவும் சர்வதேச கூட்டாளர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் தீவிர இராஜதந்திர முயற்சிகளையும் ஷேக் முகமது எடுத்துரைத்ததாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், உரையாடல் மற்றும் அமைதியான தீர்வுக்கான அமீரகத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், இராஜதந்திரம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை முன்னுரிமைப்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரந்த உத்தியை இந்த உரையாடல் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே 6 நாட்களாக தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் நடைபெற்று வருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!