அமீரக செய்திகள்

அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்ட “நைட் பீச்”.. குடியிருப்பாளர்கள் வரவேற்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை வெப்பம் தீவிரமடைந்து வரும் நிலையில், குடியிருப்பாளர்கள் குளுமையாக இருக்க அபுதாபி நைட் பீச்சை திறந்துள்ளது. இது தற்போது ஹுதைரியாத் ஐலேண்டில் திறக்கப்பட்டுள்ளது. மார்சானா கிழக்கு கடற்கரையில் புதிதாக திறக்கப்பட்ட இந்த மார்சானா இரவு கடற்கரை, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பான மற்றும் அழகிய சூழலில் குளிக்கவும், அதே நேரத்தில் வசதியான சாப்பாட்டு விருப்பங்கள் போன்ற வசதிகளை அனுபவிக்கவும் அனுமதிக்கிறது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி, இரவு கடற்கரை சீசன் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை நீடிக்கும். வார நாட்களில் சூரிய மறைவு முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் நள்ளிரவு வரையிலும் நீச்சல் அனுமதிக்கப்படுகிறது. வெப்பமான மாதங்களில் கடற்கரைக்குச் செல்வோருக்கு குளிரான, பாதுகாப்பான மாற்று சூழலை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

மேலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கடற்கரையில் ஒளிரும் நீர் (illuminated water) மற்றும் பார்வையாளர்கள் நீரேற்றத்துடன் இருக்க உதவும் வகையில் தண்ணீருடன் கூடிய மினி கூலர்களும் கிடைக்கின்றன. இந்த இரவுநேர கடற்கரைக்குள் நுழைவதற்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, வருகை நாளின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடற்கரையை இலவசமாக அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • திங்கள் முதல் வியாழன் வரை: 12 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்களுக்கு 50 திர்ஹம், குழந்தைகளுக்கு (6–11) 25 திர்ஹம்
  • வெள்ளி முதல் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள்: பெரியவர்களுக்கு 100 திர்ஹம், குழந்தைகளுக்கு 50 திர்ஹம்

இதற்கிடையில், துபாய் ஜுமேரா 2, ஜுமேரா 3 மற்றும் உம் சுகீம் 1 ஆகிய இடங்களில் அதன் பிரபலமான இரவு கடற்கரைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன, இவை அனைத்தும் 2023 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளி மக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!