ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஆண்டின் இறுதி இரண்டு மாதங்கள் புதிய விதிகள், வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியக திறப்பு விழாக்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் முக்கிய தேசிய கொண்டாட்டங்கள் என மிகவும் பரபரப்பாக இருக்கும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த கலாச்சார சின்னங்களின் திறப்பு விழாவிலிருந்து துபாயின் பிரபலமான ஷாப்பிங் நிகழ்வு மீண்டும் வருவது வரை, இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து குடியிருப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றி இந்த பதிவில் காணலாம்.
1. துபாயில் டெலிவரி பைக்குகள் இடது பாதைகளில் செல்வதற்கு தடை
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் துபாய் காவல்துறை நவம்பர் 1 முதல், அதிவேக பாதைகளில் இருந்து டெலிவரி பைக்குகளை தடை செய்யும் புதிய விதிகளை அமல்படுத்தும், இது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் சாலை விபத்துகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
- ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பாதைகளைக் கொண்ட சாலைகளில் இடதுபுறத்தில் உள்ள இரண்டு பாதைகளிலும், மூன்று அல்லது நான்கு பாதைகளைக் கொண்ட சாலைகளில் இடதுபுறத்தில் உள்ள இரண்டு பாதைகளிலும் டெலிவரி ரைடர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இருவழிச் சாலைகளில் இந்த தடை இல்லை.
- இந்த விதியை மீறினால் முதல் குற்றத்திற்கு 500 திர்ஹம் முதல் மீண்டும் மீண்டும் மீறினால் 700 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும், அதே நேரத்தில் மூன்றாவது மீறல் அனுமதி ரத்து செய்யப்படுவதற்கு வழிவகுக்கும். 100 கிமீ/மணிக்கு மேல் வேகமெடுத்தால் 200–400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
2.ஷார்ஜாவில் பிரத்யேக பாதைகளுக்கான புதிய விதிகள்
நவம்பர் 1 முதல் ஷார்ஜா காவல்துறை மோட்டார் சைக்கிள்கள், டெலிவரி பைக்குகள், கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தவும், எமிரேட் முழுவதும் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்காகவும் பிரத்யேக பாதைகளை உருவாக்கும்.
- மோட்டார் சைக்கிள்கள் நான்கு வழிச் சாலைகளில் வலதுபுறத்தில் இருந்து மூன்றாவது மற்றும் நான்காவது பாதைகளை பயன்படுத்தலாம், மேலும் மூன்று வழிச் சாலைகளில் நடு அல்லது வலது பாதையை பயன்படுத்தலாம். இருவழிச் சாலைகளில், அவை வலது பாதைக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படும்.
- கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் வலதுபுற பாதையில் இருக்க வேண்டும்.
இதற்கிடையில், ஸ்மார்ட் ரேடார்கள் மற்றும் AI-மூலம் இயக்கப்படும் கேமராக்கள் இந்த விதியினை கண்காணிக்கும். மீறுபவர்கள் கூட்டாட்சி போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அபராதங்களை எதிர்கொள்வார்கள் என்றும், இதில் 1,500 திர்ஹம் அபராதம் மற்றும் கனரக வாகனங்களுக்கு 12 ப்ளாக் பாயின்ட், மற்றும் பிற மீறல்களுக்கு 500 திர்ஹம் அபராதம் ஆகியவை அடங்கும்.
3. அபுதாபியில் புதிய ‘Natural History Museum‘
அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில், வருகின்ற நவம்பர் 22 அன்று ‘Natural History Museum‘ என்ற புதிய அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, சுமார் 35,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த அருங்காட்சியகம் மிகப்பெரியதாக இப்பகுதியில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
‘Mecanoo’ என்ற புகழ்பெற்ற கட்டிடக்கலை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், அறிவியல் ஆர்வத்தையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
4. சையத் நேஷனல் மியூசியம்
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சையத் நேஷனல் மியூசியம் டிசம்பர் 3 ஆம் தேதி திறப்பு விழா காணும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாதியத் கல்ச்சுரல் டிஸ்ட்ரிக்ட்டில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் பின்வருவன இடம்பெறும்:
- ஆறு நிரந்தர காட்சியகங்கள் மற்றும் தற்காலிக கண்காட்சி இடம்.
- அல் அய்னில் காணப்படும் 300,000 ஆண்டுகள் பழமையான கல் கருவி உட்பட 3,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள்.
- நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் ஒர்க் ஷாப்கள்
‘Foster + Partners’ வடிவமைத்த இந்த அருங்காட்சியகத்தின் கட்டிடக்கலை பருந்தின் இறகைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். டிக்கெட்டுகள் zayednationalmuseum.ae இல் 70 திர்ஹம்ஸ்க்கு கிடைக்கின்றன.
5. அமீரக பள்ளிகளில் குளிர்கால விடுமுறை
அமீரகம் முழுவதும் உள்ள பள்ளிகள் 2025–26 கல்வியாண்டிற்கான குளிர்கால விடுமுறை தேதிகளை அறிவித்துள்ளதால், குடும்பங்கள் இப்போது ஆண்டு இறுதி விடுமுறைகளைத் திட்டமிடத் தொடங்கலாம்:
- செப்டம்பர்–ஜூன் காலண்டரைப் பின்பற்றும் பள்ளிகள்: டிசம்பர் 8, 2025 – ஜனவரி 4, 2026
- இந்திய பாடத்திட்டப் பள்ளிகள்: டிசம்பர் 15, 2025 – ஜனவரி 4, 2026
ஜனவரியில் புதிய பருவம் தொடங்குவதற்கு முன்பு குடும்பங்கள் பயணம் செய்ய, ஓய்வெடுக்க இந்த இடைவெளி நேரத்தை வழங்குகிறது.
6. துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்
துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (DSF) அதன் 30வது பதிப்பிற்காக டிசம்பர் 5, 2025 முதல் ஜனவரி 11, 2026 வரை மீண்டும் வருகிறது, இது நம்ப முடியாத ஷாப்பிங் சலுகைகள், பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்டங்களை ஒன்றிணைக்கிறது.
கூடுதலாக, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பின்வருவனவற்றை எதிர்நோக்கலாம்:
- 800+ பிராண்டுகளில் மெகா தள்ளுபடிகள்.
- வான வேடிக்கைகள், ட்ரோன் நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகள்.
- ராஃபிள், மற்றும் நகரம் முழுவதும் புத்தாண்டு ஈவ் கொண்டாட்டங்கள்.
இப்போது உலகளாவிய ஈர்ப்பாக, DSF விற்பனையை உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்குடன் ஒன்றிணைக்கின்றது.
7. தேசிய விடுமுறை நாட்கள் மற்றும் கொண்டாட்டங்கள்
- ஐக்கிய அரபு அமீரக கொடி தினம் – நவம்பர் 3
- நினைவு நாள் (தியாகிகள் தினம்) – நவம்பர் 30
- ஐக்கிய அரபு அமீரக தேசிய தின கொண்டாட்டங்கள் – டிசம்பர் 1–2
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel