ADVERTISEMENT

துபாயின் கட்டண பார்க்கிங் செலவுகள் 51% உயர்வு: ஒரு மணி நேரத்திற்கு 3.03 திர்ஹம்ஸ் ஆக உயர்ந்ததாக அறிக்கை வெளியீடு!!

Published: 12 Nov 2025, 7:37 PM |
Updated: 12 Nov 2025, 7:37 PM |
Posted By: Menaka

துபாயில் பொது பார்க்கிங் வசதிகளை நிர்வகித்து வரும் பார்கின் (parkin) நிறுவனத்தின் PJSC இன் சந்தை வெளிப்பாட்டின்படி, துபாய் எமிரேட்டில் கட்டண பார்க்கிங்கின் சராசரி மணிநேர செலவானது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 51% வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, ஜூலை மற்றும் செப்டம்பர் 2025 க்கு இடையில் மதிப்பிடப்பட்ட சராசரி மணிநேர கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு 3.03 திர்ஹம்ஸ் ஆக உயர்ந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் துபாயில் மாறுபட்ட பார்க்கிங் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2.01 திர்ஹம்ஸிலிருந்து அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

துபாயின் பொது பார்க்கிங் ஆப்பரேட்டரான பார்கின் இது குறித்து கூறும் போது, பார்க்கிங் மண்டலங்கள் B மற்றும் D ஆகியவை A மற்றும் C உடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகவும், நடப்பு ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கு இடையில், புதிய பொது பார்க்கிங் இடங்கள் சேர்க்கப்பட்டதால், சராசரி கட்டணம் சற்று குறைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தற்போது மதிப்பிடப்பட்டுள்ள இந்த சராசரி மணிநேர கட்டணம், அனைத்து பொது பார்க்கிங் மண்டலங்களிலும் செலுத்தப்படும் சராசரி கட்டணத்தைக் குறிப்பதுடன், மண்டல பயன்பாடு மற்றும் நேர மாறுபாடுகளுக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட, நிலையான மற்றும் பிரீமியம் பகுதிகளையும் உள்ளடக்கியது எனவும் கூறப்பட்டுள்ளது.

மாறுபட்ட பார்க்கிங் கட்டணக் கொள்கை

துபாயின் பார்க்கிங் அமைப்பு ஏப்ரல் 4, 2025 முதல் தேவை அடிப்படையிலான விலை நிர்ணயத்திற்கு மாறியது. இது இடம் மற்றும் நாளின் நேரத்தைப் பொறுத்து மாறுபடும். அந்தவகையில், டவுன்டவுன் துபாய், பிசினஸ் பே, டெய்ரா மற்றும் ஜுமேரா போன்ற பிரீமியம் பகுதிகளில் உச்ச நேரங்களில் கட்டணங்கள் (காலை 8–10 மணி மற்றும் மாலை 4–8 மணி) 6 திர்ஹம்ஸ் ஆக உள்ளன. மற்ற நேரங்களில் பழைய கட்டணங்களே தொடர்கிறது. அதே நேரத்தில் இரவு 10–8 மணி மற்றும் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் பார்க்கிங் இலவசமாகும்.

ADVERTISEMENT

அதிகரிக்கும் சீசனல் கார்டு பயன்பாடு

இந்த கட்டண மாற்றத்தைத் தொடர்ந்து, பல வாகன ஓட்டிகள் சீசனல் கார்டுகளுக்கு மாறியுள்ளனர், இதனால் சீசனல் கார்டுகளின் விற்பனையும் 126 சதவீதம் உயர்ந்து 81,000 ஆக உயர்ந்துள்ளதாக பார்கின் தெரிவித்துள்ளது. மேலும், நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 157 மில்லியன் திர்ஹம் நிகர லாபத்தை பதிவு செய்திருப்பதாகவும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 50 சதவீதம் அதிகம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel