ADVERTISEMENT

2026 புத்தாண்டு கொண்டாட்டம்: பூங்காக்கள் செயல்படும் நேரத்தை நீட்டித்த துபாய் முனிசிபாலிட்டி!!

Published: 30 Dec 2025, 12:29 PM |
Updated: 30 Dec 2025, 12:31 PM |
Posted By: Menaka

துபாய் நகரமானது 2026 பிரம்மாண்டமான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக முழுவீச்சில் தயாராகி வருகிறது. அமீரகக் குடியிருப்பாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்விக்கும் வகையில், பல இடங்களில் வாணவேடிக்கை மற்றும் ட்ரோன் நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த பண்டிகைச் சூழலை மேலும் சிறப்பிக்கும் வகையில், துபாய் முனிசிபாலிட்டி, டிசம்பர் 31, 2025 மற்றும் ஜனவரி 1, 2026 ஆகிய தேதிகளில் பொதுப் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் செயல்படும் நேரங்களை மாற்றி அமைத்து அறிவித்துள்ளது. இதன் மூலம் குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் இரவு நேரத்திலும் வெளிப்புறக் கொண்டாட்டங்களை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பூங்கா நேரங்கள்

  • அல் சஃபா பார்க் மற்றும் ஜபீல் பார்க்: காலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை
  • க்ரீக் பார்க் மற்றும் முஷ்ரிஃப் நேஷனல் பார்க்: காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை
  • அல் மம்சார் பார்க் : காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை
  • சில்ட்ரென்ஸ் சிட்டி: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
  • ரெசிடென்ஷியல் பார்க்ஸ் மற்றும் திடல்கள்: காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை
  • குர்ஆனிக் பார்க்: காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை
  • கேவ் மற்றும் க்ளாஸ் ஹவுஸ்: காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை
  • துபாய் ஃபிரேம்: காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை; இந்த ஆண்டு, துபாய் ஃபிரேம் தனது வருடாந்திர வாணவேடிக்கைக் காட்சிக்கு கூடுதலாக ட்ரோன் நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளது.

லேக் பார்க் நேரங்கள்

துபாயில் உள்ள லேக் பார்க்குகள் புதன்கிழமை, டிசம்பர் 31, 2025 அன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்கும். இதில் பின்வரும் பூங்காக்கள் அடங்கும்:

ADVERTISEMENT

லீம் லேக் பார்க் (ஹத்தா), அல் வாதி பார்க் (ஹத்தா), கதீர் அல் தைர் பாண்ட் பார்க், அல் பர்ஷா பாண்ட் பார்க், அல் த்வார் பாண்ட் பார்க், அல் நஹ்தா பாண்ட் பார்க், அல் கவானீஜ் பாண்ட் பார்க், அல் வர்கா 3rd பார்க் 1, உம் சுகீம் பார்க், அல் கசான் பார்க், அல் சத்வா பார்க் மற்றும் அல் கூஸ் பார்க் 1.

நீட்டிக்கப்பட்ட இந்த நேரங்கள் பொதுமக்களின் வசதியை மேம்படுத்துவதையும், குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் நகரெங்கிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதுகாப்பாக அனுபவிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel