ADVERTISEMENT

துபாயில் காட்சிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய வெள்ளிக் கட்டி!! கின்னஸ் சாதனை படைத்த 1,971 கிலோ எடை கொண்ட கட்டி!

Published: 1 Dec 2025, 7:48 PM |
Updated: 1 Dec 2025, 7:49 PM |
Posted By: Menaka

கடந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய தங்கக் கட்டியை காட்சிப்படுத்தி சாதனையை படைத்த துபாய், தற்போது உலகின் மிகப்பெரிய வெள்ளிக் கட்டியை வெளிப்படுத்தியுள்ளது. நவம்பர் 25 அன்று ‘Dubai Precious Metals Conference’இல் காட்சிப்படுத்தப்பட்ட இந்த வெள்ளிக் கட்டி, கின்னஸ் உலக சாதனைகளால் அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள “Sam Precious Metals” நிறுவனத்தால் சுத்திகரிக்கப்பட்ட இந்த மாபெரும் வெள்ளிக் கட்டி 1,971 கிலோ எடை கொண்டது என்றும், இதில் ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்ட ஆண்டிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘1971’ எனவும் பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட விபரங்களின் படி, இது 1.3 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 999.9 தூய்மையுடன் 63,369 ட்ராய் அவுன்ஸ் வெள்ளியைக் கொண்டுள்ளது.

கின்னஸ் உலக சாதனை விலைமதிப்பற்ற உலோகத்தின் முதல் டோக்கனைசேஷன்

இந்த வெள்ளிக்கட்டியானது துபாயில் உள்ள ‘Brink’s’இன் பாதுகாப்பான பெட்டகங்களில் சேமிக்கப்படும் என்றும், மேலும் துபாய் மெய்நிகர் சொத்துக்கள் ஒழுங்குமுறை ஆணையத்தால் (VARA-Virtual Assets Regulatory Authority) கட்டுப்படுத்தப்படும் ஒரு தளமான ‘Tokinvest’டில் டோக்கனைஸ் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது முதலீட்டாளர்களுக்கு DMCC இன் டிரேட்ஃப்ளோ தளத்தில் பதிவுசெய்யப்பட்ட உண்மையான வெள்ளிக்கட்டியின் நேரடி உரிமையை வழங்குகிறது. மேலும் கின்னஸ் சான்றளிக்கப்பட்ட விலைமதிப்பற்ற இந்த உலோகப் பொருள், முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ் டோக்கனைஸ் செய்யப்படுவது உலகில் இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து DMCC இன் நிர்வாகத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அகமது பின் சுலாயம் பேசுகையில், விலைமதிப்பற்ற உலோகங்களை சுத்திகரித்தல், சேமித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் சொத்து உள்கட்டமைப்புக்கான மையமாக துபாயின் வளர்ந்து வரும் பங்கை இந்த திட்டம் எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஒரு உண்மையான வெள்ளிக் கட்டியை டிஜிட்டல் டோக்கன்களுடன் இணைப்பதன் மூலம், உலோகங்களை தாங்களாகவே சேமிக்க விரும்பாத பரந்த அளவிலான முதலீட்டாளர்களுக்கு, இது போன்ற உயர் மதிப்புள்ள உலோகங்களை அணுகக்கூடியதாக மாற்றுவதை DMCC நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel