ADVERTISEMENT

ஜனவரி 2, 2026 முதல் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் மாற்றம்..!! அமீரக அரசு அறிவிப்பு..!!

Published: 9 Dec 2025, 5:57 PM |
Updated: 9 Dec 2025, 6:02 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளைகள் மற்றும் ஜகாத் பொது ஆணையம், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் சிறப்பு ஜூம்ஆ தொழுகைக்கான ஒருங்கிணைந்த மாற்றத்தை அறிவித்துள்ளது. இது வெள்ளிக்கிழமை, ஜனவரி 2, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய அட்டவணையின் கீழ், வெள்ளிக்கிழமை தொழுகை பிற்பகல் 12:45 மணிக்கு அதாவது தற்போதுள்ள நேரத்தை விட அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், தொழுகையை தவறவிடுவதைத் தவிர்க்கவும், சரியான நேரத்தில் கலந்துகொள்வதற்கான முழு பலனையும் பெறுவதை உறுதிசெய்யவும், வழிபாட்டாளர்கள் மசூதிகளுக்கு சீக்கிரமாக வருமாறு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்த முடிவு நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை தொழுகை நேரங்களை தரப்படுத்துகிறது, அமைப்பை மேம்படுத்த உதவுகிறது மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டாளர்களுக்கும் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2022 முதல் அமீரகத்தில் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக சனி, ஞாயிறு விடுமுறைகள் மாற்றியமைக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெள்ளிக்கிழமையில் ஒரே நேரத்தில் ஆண்டு முழுவதும் தொழுகை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமீரக அரசு இந்த புதிய நேர மாற்றத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT