ADVERTISEMENT

துபாய்: குளோபல் வில்லேஜில் நடத்தப்படவிருக்கும் சிறப்பு ட்ரோன் ஷோ..!!

Published: 26 Jan 2026, 7:20 PM |
Updated: 26 Jan 2026, 7:23 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், குளோபல் வில்லேஜ் நிர்வாகமானது ஜனவரி 31 சனிக்கிழமை முதல் பிப்ரவரி 3 செவ்வாய் வரை ‘Hag Al Leila’ என்ற நான்கு நாள் கொண்டாட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஷாபானின் 15வது இரவில் அனுசரிக்கப்படும் ஹக் அல் லைலா, குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு நேசத்துக்குரிய கலாச்சார நிகழ்வாகும்.

ADVERTISEMENT

இது தொடர்பாக குளோபல் வில்லேஜ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, குளோபல் வில்லேஜின் பிரதான மேடைக்கு எதிரே ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெறும், இதில் கலை மற்றும் கைவினை ஒர்க்ஷாப்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பல அம்சங்கள் இடம்பெறும் என்பது தெரிய வந்துள்ளது. கூடுதலாக, பிரபலமான கதாபாத்திரங்கள் குழந்தைகளுடன் உரையாடுவார்கள், புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பார்கள் மற்றும் நிகழ்வு முழுவதும் பரிசுப் பைகளை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இணைந்துள்ள ஹெரிட்டேஜ் வில்லேஜ், பார்வையாளர்களுக்கு பாரம்பரிய எமிராட்டி வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கும். இங்கு குடும்பங்கள் எமிராட்டி ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், மிட்டாய் சேகரிப்பு கூடைகள் (candy-collection baskets), கிளாசிக் ஸ்நாக்ஸ் மற்றும் வீட்டு கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருட்களை காணலாம்.

ADVERTISEMENT

இவற்றுடன் விருந்தினர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், ஹக் அல் லெய்லா கருப்பொருள் கொண்ட ட்ரோன் கண்காட்சி பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை இரவு 7:35 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்கள் சமூக பிணைப்பு, பிரதிபலிப்பு மற்றும் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தின் மதிப்புகளை மையமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel

ADVERTISEMENT