ADVERTISEMENT

பிப்ரவரி முதல் 111 அச்சுறுத்தல்கள், 17 ஏவுகணைத் தாக்குதல்கள்: துபாய் விமான நிலையம் சந்தித்த சவால்கள்.!!

Published: 10 Sep 2026, 8:25 PM |
Updated: 10 Sep 2026, 8:25 PM |
Posted By: admin

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இந்த ஆண்டு நடைபெற்ற பிராந்திய மோதலின் போது, துபாய் சர்வதேச விமான நிலையங்கள் 111 அச்சுறுத்தல் எச்சரிக்கைகளையும், 17 ஏவுகணைத் தாக்குதல்களையும் எதிர் கொண்டதாக துபாய் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அவற்றில் பெரும்பாலானவை மிகக் குறைந்த சேதத்தையே ஏற்படுத்தியதாகவும், காயமடைந்த அனைவரும் இப்போது முழுமையாக குணமடைந்துள்ளனர் என்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் இன்று வியாழக்கிழமை (செப்.10) துபாய் மீடியா ஆபீஸ் நடத்திய சர்வதேச ஊடக விளக்கக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

விமானத்துறையில் மிகுந்த அனுபவமிக்க பால் கிரிஃபித்ஸ், அசாதாரண இடையூறுகளுக்கு இடையேயும் துபாயின் விமானத்துறை எவ்வளவு உறுதியாக இருந்தது என்பதை இது காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த நெருக்கடி நிலையிலிருந்து துபாய் விமான நிலையம் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மோதல் காலத்தில் துபாய் விமான நிலையங்கள் 111 எச்சரிக்கைகளையும் 17 தாக்குதல்களையும் சந்தித்த போதிலும், மிகவும் அதிர்ஷ்டவசமாக மிகக் குறைந்த சேதத்தையே விமான நிலையம் எதிர் கொண்டதாக கூறியதுடன், இறப்புகள் எதுவும் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி எனவும் கூறியுள்ளார். இந்த தாக்குதலால் ஓரு சிலர் காயமடைந்த நிலையில், இப்போது அனைவரும் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் தெரித்துள்ளார்.

தாக்குதல் காரணமாக இடையூறுகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டின் முதல் பாதியில் துபாய் விமான நிலையங்கள் 3.15 கோடி பயணிகளைக் கையாண்டுள்ளது தெரியவந்துள்ளது. மார்ச் மாதத்தில் 25 லட்சமாகக் குறைந்த மாதாந்திர விமானப் பயணிகள் போக்குவரத்து பின்னர் கூர்மையாக உயர்ந்து, ஜூனில் 50 லட்சமாகவும், ஜூலையில் 63 லட்சமாகவும் உயர்ந்தது.

ADVERTISEMENT

கடந்த பிப்ரவரியில் தொடங்கிய தாக்குதலுக்கு முன்பாக, இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி பயணிகளை கையாள, துபாய் விமான நிலையம் இலக்கு வைத்திருந்தது. ஆனால் விமான பயணத்தில் ஏற்பட்ட இடையூறுகளால் அதற்கு சாத்தியமில்லை என்றாலும், அந்த இலக்கை அடுத்த ஆண்டு எட்டக்கூடும் என்று பால் கிரிஃபித்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு துபாய் விமான நிலையம் 9.52 கோடி பயணிகளை கையாண்டு சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.