ADVERTISEMENT

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!மேம்பாட்டு பணிகள் காரணமாக தற்காலிக மாற்றுப்பாதையை அறிவித்த துபாய்..

Published: 11 Sep 2026, 3:19 PM |
Updated: 11 Sep 2026, 3:19 PM |
Posted By: admin

அபுதாபி மற்றும் போர்ட் ரஷித் (Port Rashid) நோக்கிச் செல்லும் ‘ஓத் மேத்தா’ (Oud Metha) சாலைப் பாலத்தின் மெதுவான வேகப் பாதையில் (slow lane) தற்காலிகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன்படி இப்பகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக, வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இக்காலகட்டத்தில் இச்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, கூடுதல் பயண நேரத்தை ஒதுக்குமாறும், தங்கள் இலக்குகளைச் சிரமமின்றி அடைய வழிகாட்டும் குறியீடுகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக துபாய் – அல் அய்ன் (Dubai–Al Ain) சாலையிலிருந்து ‘ஓத் மேத்தா’ சர்வீஸ் சாலைக்கு வாகனப் போக்குவரத்தை இணைக்கும் புதிய சுரங்கப்பாதை ஒன்றை துபாய் திறந்துள்ளதாக, துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கடந்த ஆகஸ்ட் 9 அன்று அறிவித்திருந்தது.

ஒற்றைப் பாதையைக் கொண்ட இந்தச் சுரங்கப்பாதை 260 மீட்டர் நீளம் கொண்டது; இதில் ஒரு மணி நேரத்திற்கு 1,200 வாகனங்கள் வரை பயணிக்க முடியும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகன ஓட்டங்களுக்குச் சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை வழங்கவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சுரங்கப்பாதையானது ‘ஓத் மெத்தா’ சாலை மற்றும் ‘அல் அசாயல்’ (Al Asayel) ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். RTA-வின் தகவலின்படி, ஜூலை மாத இறுதியில் இத்திட்டத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்திருந்தன.

இத்திட்டத்தில் 4.3 கி.மீ நீளமுள்ள பாலங்கள் மற்றும் 14 கி.மீ நீளமுள்ள சாலைகள் அடங்கும்; மேலும் இது ‘ஓத் மேத்தா’ சாலையின் போக்குவரத்துத் திறனை 50 சதவீதம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.