ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் ராஃபிள் டிராக்களில் பெரும்பாலும் இந்தியர்களில் கேரளாவை சேர்ந்தவர்களுக்கே அவ்வப்போது வெற்றி கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது சமீப காலமாக தமிழர்களும் அடிக்கடி வென்று வருகின்றனர். அதில் தற்பொழுது அபுதாபியில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவர், ஆறு வருடங்களாகத் தனியாகவே தனது அதிர்ஷ்டத்தை முயற்சித்துப் பார்த்த பிறகு, பிக் டிக்கெட்டின் பிக் வின் போட்டியில் 1,30,000 திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 வயதான மூத்த பொறியாளரான தியாகராஜன் பெரியசாமி என்பவர், 10 வருடங்களாக அபுதாபியில் வசித்து வருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற சிறிது வருடங்களிலேயே பிக் டிக்கெட்டை வாங்க ஆரம்பித்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து டிக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
நண்பர்கள் பலர் இருந்தாலும், பெரியசாமி எப்போதும் தனியாகவே டிக்கெட்டை வாங்கி தனது அதிர்ஷ்டத்தை முயற்சித்திருக்கிறார். இறுதியில் அவருக்கான தருணம் வந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில் இந்த வெற்றி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றும் நான் உண்மையிலேயே அதை எதிர்பார்க்கவில்லை. எனவே, இது ஒரு பெரிய ஆச்சரியம். நான் கடந்த ஆறு ஆண்டுகளாக வாங்கி வருகிறேன், இந்த முறை நான் வென்றது மகிழ்ச்சியாக இருக்கின்றது என கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel