வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிதறிய பாகங்கள் விழுந்ததால் அபுதாபி கலீஃபா பொருளாதார மண்டலங்கள் (KEZAD) பகுதிக்கு அருகில் இரண்டு தீ விபத்துகள் ஏற்பட்டது என்றும் அதில் 5 இந்தியர்கள் காயம் அடைந்ததாகவும் சற்று முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அந்த சம்பவத்தின் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மூன்றாவது தீ விபத்து ஏற்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் விளைவாக, பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கூடுதலாகக் காயமடைந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்மூலம், லேசானது முதல் மிதமானது வரையிலான காயங்களுடன், காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து மூன்று தீ விபத்துகளையும் அதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர் என்றும் மேலும் குளிர்விக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.