அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள எரிவாயு நிலையத்தில் வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட பின்னர் விழுந்த ஏவுகணை சிதறல்கள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இடைமறிப்பால் ஏற்பட்ட சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்ததைத் தொடர்ந்து, அபுதாபியின் ஹப்ஷான் எரிவாயு நிலையத்தில் இந்த தீ விபத்து நிகழ்ந்ததாகவும் தற்பொழுது அதற்கான தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை. அதே நேரத்தில் நிலைமை சீராகும் வரை அங்கு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் அபுதாபியின் அஜ்பான் பகுதியிலும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட பின்னர் விழுந்த ஏவுகணை சிதறல்கள் விழுந்த சம்பவத்திற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.