அமீரக செய்திகள்

அமீரகத்தில் தூசி நிறைந்த வானிலை நிலவும் என அதிகாரிகள் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் இன்று பகல் நேரத்தில் தூசி நிறைந்த வானிலையை எதிர்கொள்வார்கள் என்று அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அமீரகத்தில், வேகமாக வீசும் காற்றானது தூசியை கிளப்பும் என்பதால் தூசி வெளிப்படும் பகுதிகளில் கிடைமட்டத் தெரிவுநிலையைக் குறைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலைக்குள் காற்றின் வேகம் லேசானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று இரவு மற்றும் வியாழன் காலை சில கடலோரப் பகுதிகளில், குறிப்பாக வடக்கு நோக்கி ஈரப்பதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!