அமீரக செய்திகள்

பிரம்மிக்க வைக்கும் கட்டிடக்கலை.!! அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினல் A இன் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்..!!

அபுதாபியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட விமான நிலையமான டெர்மினல் A, இந்தாண்டு நவம்பர் மாதத் தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நவீன விமான நிலையத்தின் பிரம்மாண்ட தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 742,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் டெர்மினல் A, உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும். மேலும், அதன் பரந்து விரிந்திருக்கும் கட்டிடக்கலை பார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் உள்ளது.

புதிய அபுதாபி ஏர்போர்ட் டெர்மினல் A – புகைப்படம் 1

டெர்மினல் Aயின் வளைந்த மேற்கூரை கட்டிடத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகக் விளங்குகிறது, இது சிற்பி போன்ற வடிவமைப்பில் இருப்பதால், “பாலைவனத்தில் முத்து” போன்ற காட்சியைக் கொடுக்கிறது.

புதிய அபுதாபி ஏர்போர்ட் டெர்மினல் A – புகைப்படம் 2

அதேசமயம், விமான நிலையத்தின் உட்புறத்தில் உள்ள சமச்சீரான ஹை-சீலிங், உள்ளே பரந்த மற்றும் வெளித்தோற்றத்தில் இலகுவான உணர்வை மேம்படுத்துவதுடன், பயணிகளின் எளிதான போக்குவரத்தை உறுதிப்படுத்துகின்றன.

சோதனையில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்:

நவீன விமான நிலையத்தில் செக்-இன் மற்றும் பேக்கேஜ், செக்யூரிட்டி ஸ்கிரீனிங், போர்டிங் கேட்ஸ், இமிக்ரேஷன் மற்றும் சுங்கம் போன்ற பல்வேறு விமான நிலைய நடைமுறைகளை சோதனை செய்வதற்காக சுமார் 6,000 தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய அபுதாபி ஏர்போர்ட் டெர்மினல் A – புகைப்படம் 3

இந்த சோதனை கட்டம் குறித்து அபுதாபி விமான நிலையத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் இடைக்கால CEO எலினா சோர்லினி அவர்கள் பேசுகையில், தன்னார்வலர்கள் விமான நிலையத்தில் பயணிகளுக்கான கட்டுப்பாட்டுச் செயல்முறைகளின் வேகம் மற்றும் துல்லியத்தை சோதனை செய்தல், ஆவணத்தை நன்றாக சரிபார்த்தல் மற்றும் சுங்க ஆய்வுகள் போன்றவற்றை ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அபுதாபி ஏர்போர்ட் டெர்மினல் A – புகைப்படம் 4

அதிநவீன தொழில்நுட்பங்கள்:

டெர்மினல் A ஆனது, கண்களைக் கவரும் கட்டிடக்கலை மட்டுமின்றி, சமீபத்திய தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக, இங்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் அமைப்புகள் உள்ளன, இதன் மூலம் பயணிகள், பயணத்திற்கு முன்னிருந்து போர்டிங் கேட் வரை தடையற்ற அனுபவத்தைப் பெற முடியும்.

அத்துடன், செல்ஃப் சர்வீஸ் கியோஸ்க்குகள், நெறிப்படுத்தப்பட்ட செக்யூரிட்டி செக் பாயிண்ட்கள் மற்றும் லக்கேஜ்களைக் கையாளும் லேட்டஸ்ட் அமைப்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய அபுதாபி ஏர்போர்ட் டெர்மினல் A – புகைப்படம் 5

அதுமட்டுமின்றி, பயணிகளுக்கென பிரத்யேகமான ஆடம்பரமான ஓய்வறைகள் மற்றும் ஸ்பா வசதிகள் என ஏராளமான உலகத் தரம் வாய்ந்த வசதிகளும், பயணிகளின் விருப்பங்களுக்கேற்ப பல்வேறு சுவை மிகுந்த உணவுகள் மற்றும் பானங்களை விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்களும் இந்த டெர்மினலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அபுதாபி ஏர்போர்ட் டெர்மினல் A – புகைப்படம் 6

இந்த டெர்மினல் Aக்கு எதிஹாட் ஏர்வேஸ், விஸ் ஏர் மற்றும் ஏர் அரேபியா அபுதாபி ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Back to top button
error: Content is protected !!