அமீரக செய்திகள்

துபாய்: வான வேடிக்கை, தள்ளுபடி, 5 இலட்சம் திர்ஹம் வெல்ல வாய்ப்பு என பட்டையை கிளப்பும் தேசிய தின கொண்டாட்டம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் துபாயில் தேசிய தினத்தை முன்னிட்டு வான வேடிக்கை நிகழ்வுகள், தள்ளுபடிகள் மற்றும் ராஃபிள்கள் ஆகியவை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனத்தால் (DFRE) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டங்கள் டிசம்பர் 2 முதல் 11 வரை நடைபெறும்.

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் தேசிய தினத்திற்கான விடுமுறை நாட்களுடன் இந்த நிகழ்வுகள் ஒத்துப்போகின்றன.

வானவேடிக்கை

50வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் துபாயின் இரண்டு நாட்களுக்கு திகைப்பூட்டும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் The Pointe, ப்ளூவாட்டர்ஸ் (bluewaters), ஜுமேரா கடற்கரையில் சன்செட் மாலுக்குப் பின் உள்ள  எடிசலாட் பீச் கேண்டீன், லா மெர் (la mer), புர்ஜ் அல் அரப் (burj al arab) மற்றும் Atlantis at The Palm ஆகிய இடங்களில் இரவு 8, 8.30 மற்றும் 9 மணிக்கு இந்த வானவேடிக்கைகள் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடிகள்

துபாயின் ஷாப்பிங் மால்கள் மற்றும் சில்லறை விற்பனை இடங்களான மஜித் அல் ஃபுத்தைம் மால்கள், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், துபாய் மால் மற்றும் துபாய் அவுட்லெட் மால் ஆகியவை டிசம்பர் 13 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 50-70 சதவீதம் தள்ளுபடியை வழங்கவிருக்கின்றன.

500,000 திர்ஹம் ரேஃபிள்

இந்த ரேஃபிளில் 50 திர்ஹமிற்கு Ubel பேட்ஜ் வாங்கினால் 500,000 திர்ஹம் பணத்தை வெல்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், ஜூபிலி என்ற வார்த்தையின் அரபு மொழிபெயர்ப்பிலிருந்து உபெல் என்ற பெயர் பெறப்பட்டதன் காரணத்தையொட்டி இந்த ரேஃபிள் நடத்தப்படவுள்ளது. Ubel பேட்ஜ் பிரத்தியேகமாக www.idealz.com என்ற வலைதளத்தில் கிடைக்கிறது. இதற்கான குலுக்கல் நேரடியாகவும் தொலைக்காட்சியிலும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பீச் கேண்டீன்

எடிசலாட் பீச் கேன்டீனின் 2021 பதிப்பு நவம்பர் 25 முதல் டிசம்பர் 11 வரை இயங்கும். 17 நாட்கள் நடைபெறும் இதில் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஈர்க்கக்கூடிய செயல்பாடுகள் ஆகியவை அடங்கும்.

DFRE இன் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல் காஜா, “அமீரகத்தின் பொன்விழா நாட்டின் முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளின் 50 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்த சிறப்பான மைல்கல்லைக் கொண்டாட, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருட தேசிய தினம் வேறு எங்கும் இல்லாத மாபெரும் கொண்டாட்டத்தைடன் கோலாகலமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!