அமீரக செய்திகள்

இஸ்லாமிய புத்தாண்டிற்கு ஷார்ஜாவில் நான்கு நாட்கள் விடுமுறை..!! – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஷார்ஜாவின் மனிதவள ஆணையம்..!!

இஸ்லாமிய புத்தாண்டை ஷார்ஜாவில் பணிபுரியும் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஷார்ஜாவின் மனிதவள ஆணையம் விடுமுறை தேதியை அறிவித்துள்ளது. அதில் ஜூலை 20 ம் தேதியான வியாழக்கிழமை அன்று இஸ்லாமிய புத்தாண்டிற்கான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமீரகத்தின் மனித வளங்களுக்கான ஃபெடரல் அத்தாரிட்டி அனைத்து அமீரக அமைச்சகங்கள் மற்றும் மத்திய துறைகளுக்கு இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு மத்திய அரசில் பணிபுரிபவர்களுக்கு ஜூலை 21 வெள்ளிக்கிழமை விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு, அமீரகத்தில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஜூலை 21 ம் தேதியை விடுமுறையாக அரசு அறிவித்தது. இந்த நிலையில் ஷார்ஜா அரசாங்கத்தின் மனிதவளத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறை ஜூலை 20, 2023 வியாழன் அன்று தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “ஜூலை 24, 2023 திங்கள்கிழமை அன்று அதிகாரப்பூர்வ வேலை நேரம் மீண்டும் தொடங்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஷார்ஜா எமிரேட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது.

ஷார்ஜா அரசாங்கத் துறையானது கடந்த ஜனவரி 2022 இல் மூன்று நாள் வார இறுதி விடுமுறையை கடைபிடித்து வருகிறது. அதில் இருந்து ஷார்ஜாவில் அரசு ஊழியர்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்கள் வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமீரகத்தில் உள்ள மற்ற ஆறு எமிரேட்களில் உள்ள குடியிருப்பாளர்கள் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்கும் போது, ஷார்ஜாவில் மட்டும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை அரசு ஊழியர்கள் அனுபவிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!