அமீரக செய்திகள்

அமீரகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்.. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஜூஸ், தண்ணீர் வழங்கிய காவல்துறை..!!

அமீரகத்தின் ஹட்டா காவல் நிலையத்தால் நடத்தப்பட்ட ‘சோகியா ஹட்டா’ என்ற சமூக முயற்சியில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் விநியோகிக்கப்பட்டது. இதில் துபாய் போலீஸ் ஜெனரல் கமாண்ட் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். ஹட்டா காவல் நிலையத்தின் இந்த நிகழ்வானது ஒற்றுமையின் மதிப்புகளில் கவனம் செலுத்தி அதனை மேம்படுத்த சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுடனும் தொடர்பு பாலங்களை உருவாக்குவதை நோக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஹட்டா காவல் நிலைய இயக்குநர் கர்னல் முபாரக் அல் கெட்பி கூறுகையில், இந்த முயற்சியில் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறப்பணிகள் துறையான (IACAD) வழங்கும் நற்பண்பு பற்றிய விரிவுரையும் இடம்பெற்றது. ஹட்டா மருத்துவமனை மற்றும் தடாவி மருத்துவமனை மூலம் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டது.

‘சோகியா ஹட்டா’வில் கலந்துக்கொண்ட தொழிலாளர்களின் அயராத முயற்சிகளையும், அமீரகத்தின் முன்னேற்றத்திற்கான அவர்களின் பங்களிப்பு குறித்து விவரிக்கப்பட்டு பாராட்டப்பட்டது, இந்த நிகழ்வில் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்ததாக கர்னல் அல் கெட்பி கூறினார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!