அமீரக செய்திகள்

துபாயில் குறைந்த கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை தேடுகிறீர்களா.? உங்களுக்கான விபரங்கள் இங்கே..!!

துபாயில் உள்ள தனியார் பள்ளிகள் வருடாந்திர ஆய்வு மதிப்பீட்டின் அடிப்படையில் கல்விக் கட்டணத்தை அதிகரிக்க அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மலிவான கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு மாற்ற நினைக்கிறார்கள்.

KHDA இப்போது பள்ளிக் கட்டணம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஆன்லைனில் அணுகக்கூடிய விரிவான தாளில் கிடைக்கச் செய்துள்ளது. ஆகவே, பெற்றோர்கள் ஒரு சில வினாடிகளில் ஒரு பள்ளி எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

KHDA விரிவான தாள்களில் வெளியிட்ட 2023-2024 கட்டணத்தின் அடிப்படையில், துபாயில் மிகவும் குறைவான கட்டணம் வசூலிக்கும் சில பள்ளிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

கிரசண்ட் ஆங்கிலப் பள்ளி (Crescent English School)

 • வருடாந்திர கட்டணம்: 3,954 திர்ஹம்ஸ் (KG1) முதல் 10,280 திர்ஹம்ஸ் (கிரேடு 12)
 • பாடத்திட்டம் (curriculum) : இந்தியன்
 • நிறுவப்பட்ட ஆண்டு: 1984
 • KHDA மதிப்பீடு: Acceptable
 • இடம்: அல் குசைஸ் ஃபர்ஸ்ட்

லிட்டில் ஃப்ளவர் ஆங்கிலப் பள்ளி துபாய் (Little Flower English School Dubai)

 • வருடாந்திர கட்டணம்: 4,004 திர்ஹம்ஸ் (KG1) முதல் 4,288 திர்ஹம்ஸ் (கிரேடு 6)
 • பாடத்திட்டம்: இந்தியன்
 • நிறுவப்பட்ட ஆண்டு: 1984
 • KHDA மதிப்பீடு: Acceptable
 • இடம்: ஹோர் அல் அன்ஸ்

கல்ஃப் மாடல் பள்ளி (Gulf Model School)

 • வருடாந்திர கட்டணம்: 4,490 திர்ஹம்ஸ் (KG1) முதல் 7,580 திர்ஹம்ஸ் (கிரேடு 12)
 • பாடத்திட்டம்: இந்தியன்
 • நிறுவப்பட்ட ஆண்டு: 1982
 • KHDA மதிப்பீடு: Acceptable
 • இடம்: முஹைஸ்னா ஃபர்ஸ்ட்

தி சென்ட்ரல் பள்ளி (The Central School)

 • வருடாந்திர கட்டணம்: Dh4,278 (KG1) முதல் Dh7,701 (கிரேடு 12)
 • பாடத்திட்டம்: இந்தியன்
 • நிறுவப்பட்ட ஆண்டு: 1981
 • KHDA மதிப்பீடு: Acceptable
 • இடம்: அல் நஹ்தா செகண்ட்

நியூ இந்தியன்  மாடல் பள்ளி (New Indian Model School)

 • ஆண்டு கட்டணம்: 4,697 திர்ஹம்ஸ் (KG1) முதல் 7,766 திர்ஹம்ஸ் (கிரேடு 12)
 • பாடத்திட்டம்: இந்தியன்
 • நிறுவப்பட்ட ஆண்டு: 1980
 • KHDA மதிப்பீடு: Good
 • இடம்: அல் கர்ஹூத்

இங்க்லிஷ் லாங்க்வேஜ் ப்ரைவேட் பள்ளி (English Language Private School)

 • ஆண்டு கட்டணம்: 4,312 திர்ஹம்ஸ் (FS2) முதல் 11,321 திர்ஹம்ஸ் (ஆண்டு 13)
 • பாடத்திட்டம்: UK
 • நிறுவப்பட்ட ஆண்டு: 1982
 • KHDA மதிப்பீடு: Acceptable
 • இடம்: உம் ஹுரைர் ஃபர்ஸ்ட்

அல் சாதிக் இஸ்லாமிய ஆங்கிலப் பள்ளி (Al Safiq Islamic English School)

 • ஆண்டு கட்டணம்: 5,567 திர்ஹம்ஸ் (FS2) முதல் 10,150 திர்ஹம்ஸ் (ஆண்டு 11)
 • பாடத்திட்டம்: UK
 • நிறுவப்பட்ட ஆண்டு: 1989
 • KHDA மதிப்பீடு: Acceptable
 • இடம்: அல் குசைஸ் ஃபர்ஸ்ட்

எலைட் ஆங்கிலப் பள்ளி (Elite English School)

 • ஆண்டு கட்டணம்: 5,414 திர்ஹம்ஸ் (KG1) முதல் 11,736 திர்ஹம்ஸ் (கிரேடு 12)
 • பாடத்திட்டம்: இந்தியன்
 • நிறுவப்பட்ட ஆண்டு: 1993
 • KHDA மதிப்பீடு: Acceptable
 • இடம்: தேரா

கல்ஃப் இந்தியன் உயர்நிலைப் பள்ளி (Gulf Indian High School)

 • ஆண்டு கட்டணம்: 5,033 திர்ஹம்ஸ் (KG1) முதல் 9,161 திர்ஹம்ஸ் (கிரேடு 12)
 • பாடத்திட்டம்: இந்தியன்
 • நிறுவப்பட்ட ஆண்டு: 1979
 • KHDA மதிப்பீடு: Good
 • இடம்: அல் கர்ஹூத்

க்ராமர் பள்ளி (Grammar School)

 • ஆண்டு கட்டணம்: 5,125 திர்ஹம்ஸ் (FS1) முதல் 6,954 திர்ஹம்ஸ் (ஆண்டு 13)
 • பாடத்திட்டம்: UK
 • நிறுவப்பட்ட ஆண்டு: 1974
 • KHDA மதிப்பீடு: Acceptable
 • இடம்: அல் கர்ஹூத்

அல் எமான் கல்வி EST (Al Eman Educational EST)

 • ஆண்டு கட்டணம்: 6,000 திர்ஹம்ஸ் (KG1) முதல் 8,939 திர்ஹம்ஸ் (கிரேடு 9)
 • பாடத்திட்டம்: கல்வி அமைச்சகம்
 • நிறுவப்பட்ட ஆண்டு: 1973
 • KHDA மதிப்பீடு: Acceptable
 • இடம்: அல் ரஷிதியா

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!