UAE : மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்களுக்காக LULU செய்த நல்ல காரியம்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய அனைத்து சூப்பர் மார்கெட், ஹைபெர் மார்கெட் மற்றும் குரோசரி (Grossary) போன்ற பொதுமக்கள் அன்றாடம் செல்லக்கூடிய இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குடியிருப்பாளர்களை காக்கும் வண்ணம் அமீரக அரசு பல நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, 9 வயதிற்கும் குறைவான குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷாப்பிங் செய்பவர்களும் முககவசம் (Face Mask) மற்றும் கையுறை (Hand Gloves) இல்லாமல் உள்ளே நுழைவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஷாப்பிங் செய்பவர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் பேணும் விதமாக அனைவராலும் பயன்படுத்தப்படும் ட்ராலியை (Trolley) சானிடைஸிங் செய்வதற்காவே குறிப்பிட்ட நபர்களை பணியமர்த்தியும் வைத்துள்ளனர். அதே போன்று சமூக இடைவெளியை (Social Distance) பின்பற்றும் வண்ணம் கேஷ் கவுண்டர் அனைத்திலும் 2 மீட்டர் இடைவெளியில் மார்க் செய்யப்பட்டு அதன்படி வாடிக்கையாளர்கள் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டும் வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அமீரகத்தில் இருக்கக்கூடிய LULU நிறுவனம் மருத்துவ துறையில் பணிபுரிய கூடியவர்களுக்காக பிரத்யேகமாக தனி கேஷ் கவுண்டர்களை அமைத்துள்ளது. இதுபற்றி LULU நிறுவனத்தின் சார்பாக கூறுகையில், “இன்று கொரோனாவிற்கு எதிராக போராடும் நம் அனைவருக்கும் முன்னின்று மக்கள் அனைவரையும் இந்த தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க அதிகம் போராடிக்கொண்டிருப்பவர்கள் மருத்துவ துறையைச் சார்ந்தவர்களே. அவர்கள் ஷாப்பிங் செய்வதை எளிமையாக்கவும், கவுண்டரில் அதிக நேரம் செலவிடுவதை குறைக்கும் வண்ணம் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சியே என்றும் கூறினார்.
மருத்துவத்துறையை சார்ந்தவர்களுக்காகவே பிரத்யேகமான ட்ராலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மருத்துவத்துறையை சார்ந்தவர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கும், எந்த ஒரு கேஷ் கவுண்டர்க்கு சென்றாலும் அவர்களை அடையாளம் கண்டு முன்னுரிமை வழங்குவதற்கு ஏதுவாகவும் இருக்கும் என்றும் கூறினார்.