அமீரகத்தின் முதல் நடமாடும் மளிகை பேருந்து துபாயில் அறிமுகம் !!
அமீரகத்தின் தொலைதூர சமூகங்களில் வசிப்பவர்கள் இப்பொழுது நாட்டின் நடமாடும் மளிகைப் பேருந்திலிருந்து தங்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம். துபாயில் தற்பொழுது நாட்டின் முதல் நடமாடும் மளிகை பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே இதுதான் முதல் நடமாடும் மளிகை பேருந்து ஆகும்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மஜித் அல் புட்டெய்ம் (Majid Al Futtaim) நிறுவனத்தால் இயக்கப்படும் கேரிஃபோரால் (Carrefour), மொபிமார்ட் (Mobimart) எனப்படும் நடமாடும் மளிகை பேருந்து, துபாய் முழுவதிலும் தொலைதூரங்களில் இருக்கும் குறைவான வீடுகள் மற்றும் கடைகள் உள்ள இடங்களுக்கு வசதியான மற்றும் அணுகக்கூடிய ஷாப்பிங்கை வாரத்தில் ஆறு நாட்கள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கேரிஃபோர் மொபிமார்ட், வாடிக்கையாளர்களுக்கு தினசரி மளிகை பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்குகிறது. இதில் ஆர்கானிக் பொருட்கள், ஃபிரோஸன் உணவுகள் , தின்பண்டங்கள், பானங்கள் மற்றும் இலகுவான வீட்டு பொருட்கள் ஆகியவை அடங்கும். பேருந்து அதற்கென ஒதுக்கப்பட்ட பாதையில் பல்வேறு சமூக மக்களுக்கு குறிப்பிட்ட நேர நிறுத்தங்களுடன், வாடிக்கையாளரின் வீடுகளிலிருந்து ஒரு குறுகிய நடைதூரத்தில் வண்டியை நிறுத்துகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கேரிஃபோர் மேலாளர் பிலிப் பெகுயில்ஹான் கூறியதாவது: “நாட்டின் முன்னணி விற்பனையாளராக எங்கள் நிலையை வலுப்படுத்த புதிய வழிகளை நாங்கள் தொடர்ந்து தேடுகிறோம். இதுதான் எங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைந்து, அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் தனித்துவமான கருத்துக்களைக் கொண்டு வர எங்களைத் தூண்டுகிறது.
கேரிஃபோரை அவர்களின் வீட்டு வாசல்களில் கொண்டு வருவதால், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் தடையற்ற சேவையை வழங்குவதற்கான மஜித் அல் புட்டெய்ம்மின் உறுதிப்பாட்டை கேரிஃபோர் மொபிமார்ட் பிரதிபலிக்கிறது. ” என்று கூறியுள்ளார்.கேரிஃபோர் மொபிமார்ட் துபாயில் ஹோம்கிரௌன் பெஸ்போக் டிரெய்லர்ஸால் (homegrown Bespoke Trailers) வடிவமைக்கப்பட்டது.
இந்த பேருந்து துபாயில் பல பகுதிகளுக்குச் செல்லும். பெரும்பாலானவை குடியிருப்புப் பகுதிகளாகவே இருக்கும். மேலும் கைட் பீச் மற்றும் ரஹாபா தொழிலாளர் விடுதி ஆகிய இடங்களிலும் இந்த பேருந்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது மொபிமார்ட் சேவை செய்யும் இடங்கள்:
ஜவ்ஸா – சவுத் கேட் (Javza – South Gate)
அகோயா – ஜூனிபர் கிளஸ்டர் (Akoya – Juniper Cluster)
கிளாரெட் கிளஸ்டர் மற்றும் அமசோனியா கிளஸ்டர் (Claret Cluster and Amazonia Cluster)
ரஹாபா கைட் பீச் ( Rahaba Kite Beach)
மெய்டன் – எமிரேட்ஸ் பைலட்ஸ் வில்லேஜ் அருகில்,(Meydan – near Emirates Pilots Village)
ஜூமைரா வில்லேஜ் சர்க்கிள் (Jumeirah Village Circle)
ஜூமைரா வில்லேஜ் ட்ரைஆங்கிள் (Jumeirah Village Triangle)
ஜூமைரா தீவுகள் (Jumeirah Islands)
ஸ்போர்ட்ஸ் சிட்டி – விக்டரி ஹைட்ஸ் (Sports City – Victory Heights).
மேலும் இதன் விரிவான குறிப்புகள் கேரிஃபோர் வெப்சைட் மற்றும் சமூக வலைத்தளங்களில் தினசரி அப்டேட் செய்யப்படும்.