உலகின் முதல் எலக்ட்ரிக் ஆம்புலன்ஸ்.. !!! துபாயில் அறிமுகம்…!!!
உலகில் புதுமையான விஷயங்களை முதலில் அறிமுகப்படுத்துவத்தில் பெயர் பெற்ற துபாயில், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான துபாய் கார்ப்பரேஷன் நிறுவனம் (Dubai Corporation for Ambulance Services) உலகின் முதல் எலக்ட்ரிக் ஆம்புலன்ஸை பொதுமக்களுக்கான பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி திறக்கப்பட உள்ள எக்ஸ்போ 2020 இன் போது இந்த எலக்ட்ரிக் ஆம்புலன்ஸ் செயல்பாட்டிற்கு வரும் என்று DCAS நிர்வாக இயக்குனர் கலீஃபா அல்-டிராய் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், “எக்ஸ்போ 2020 இன் போது இந்த எலக்ட்ரிக் ஆம்புலன்ஸ் அதன் செயல்பாட்டிற்கு மற்றும் விரைவான சேவைக்கு தயாராக இருக்கும் என்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த வாகனம் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வருங்கால தலைமுறையினருக்கு ஏதுவாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது DCAS ன் சுற்றுசூழல் பாதுகாப்பு திட்டத்தின் இரண்டாவது முயற்சியாக இந்த எலக்ட்ரிக் கார், ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல் முயற்சியாக கடந்த ஆண்டு தான், DCAS தனது முதல் மின்சார பைக்கை அறிமுகப்படுத்தியிருந்தது. சுற்றுச்சூழலுக்கு எந்தவொரு தீங்கும் விளைவிக்காத்த இந்த பைக், அவசரகால நேரங்களில் விரைவான செயல்பாட்டிற்கும், குறிப்பாக போக்குவரத்து அதிகமான நேரங்களில் மற்றும் நெரிசலான இடங்களில் பயன்படுத்தப்படும்போது, எரிபொருளில் இயங்கும் மற்ற பைக்குகளைப் போலவே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeகடந்த 2019 ம் ஆண்டு DCAS ஃபோர்ட் நிறுவனத்தின் ” ஃபோர்ட் ட்ரான்சிட் ஆம்புலன்ஸ்” எனுமியங்குதளத்தை கைப்பற்றியது. இந்த இயங்குதளமானது பல உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட குறிப்பாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஆம்புலன்ஸின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பது, அதன் வேகத்தைக் கண்காணிப்பது மற்றும் ஓட்டுநரை தொடர்பு கொள்வது போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் இந்த ஆம்புலன்சில் “செமி சோலார் பவர் சிஸ்டம்” மூலமாக பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ளவும், வாகனம் ஓடாத நிலையிலும்கூட ஏசி ஆன் செய்யாமலேயே ஆம்புலன்ஸை குளிர்விக்கக்கூடிய புது வகையான டெக்னாலஜியும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.