அமீரக செய்திகள்
அபுதாபியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை நாளை முதல் மீண்டும் இயங்கும்..!!
அபுதாபியில் தடை செய்யப்பட்டிருந்த பேருந்து சேவைகளானது நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் என்று அபுதாபி முனிசிபாலிட்டி மற்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
.@AbuDhabiDMT, in collaboration with its strategic partners, will conduct a 48hr sterilisation campaign of public bus services from tomorrow morning. pic.twitter.com/pKNXG0hsad
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) April 22, 2020
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து அபுதாபியில் பொது போக்குவரத்துக்கு பயன்படும் பேருந்துகள் அனைத்திலும் வியாழக்கிழமை காலை முதல் 48 மணி நேரத்திற்கு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சனிக்கிழமை காலை முதல் பேருந்து சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன் படி, அபுதாபியில் பேருந்து சேவைகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.