அமீரக செய்திகள்

துபாயில் மூடப்பட்டிருந்த சிறு கடைகள் மீண்டும் திறக்க அனுமதி..!!! ரமலானை முன்னிட்டு துபாய் DED அறிவிப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மூடப்பட்டிருந்த, உணவு பொருட்களை விற்பனை செய்யும் சிறு வணிக நிறுவனங்கள் தற்போது மீண்டும் செயல்பட துபாய் பொருளாதார மேம்பாட்டு துறை (Department of Economic Development, Dubai) அனுமதி அளித்துள்ளது. இந்த சிறு வணிக நிறுவனங்கள் அனைத்தும் ரமலானை முன்னிட்டு மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பின் படி, அனைத்து இறைச்சி (meat), பழங்கள் (fruits), காய்கறிகள் (vegetables), ரோஸ்டர் (roaster), மில்ஸ் (mills), நட்ஸ் (nuts), சாக்லேட் (chocolate), இனிப்புகள் (sweets), மீன் (fish), காபி (coffee), தேநீர் (tea) ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் காலை 8:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு மற்றும் சமூக விலகல் (social distance) போன்ற கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்குமாறு இந்த கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழக்கமான சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!