அமீரகத்தில் வழிபாட்டுத்தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிப்பு..!!! மறுஅறிவிப்பு வரும் வரை இதே நிலை தொடரும் எனத் தகவல்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, அமீரகத்தில் உள்ள மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் போன்ற அனைத்து வழிபாட்டுத்தலங்களும் கொரோனா வைரஸின் பாதிப்பையொட்டி ஏற்கெனவே மூடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது இந்த முடிவானது மறுஅறிவிப்பு வரும் வரை மேலும் நீட்டிக்க உள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வண்ணமும் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் 16 ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுதலங்களும் ஒரு மாத காலத்திற்கு மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், மறு அறிவிப்பு வரும் வரையிலும் இந்த தடையானது நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.