UAE : நாளை முதல் பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளும் முழுநேரமும் செயல்படும்..!! இந்திய துணைத்தூதரகம் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதை முன்னிட்டு, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் அதன் பாஸ்போர்ட் மற்றும் சான்றளிப்பு சேவைகள் நாளை (மே 27, புதன்கிழமை) முதல் முழுத் திறனுடன் செயல்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தூதரகத்திற்கு வரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் சமூக தொலைதூர விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு முக கவசங்கள் மற்றும் கையுறைகளை அணியுமாறு துணை தூதரகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் சேவைகளுக்கான வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் BLS மைய இடங்கள்:
- அல் கலீஜ் மையம், பர் துபாய் (Al Khaleej Centre, Bur Dubai)
- ஜீனா கட்டிடம், தேரா சிட்டி சென்டருக்கு எதிரே (Zeenah Building, opposite Deira City Centre)
- ஷார்ஜாவில் கிங் பைசல் தெருவில் உள்ள அப்துல் அஜீஸ் மஜித் கட்டிடம் (Abdul Aziz Majid Building on King Faisal Street in Sharjah)
- ஷார்ஜா இந்திய சங்கம் (Sharjah Indian Association)
- புஜைராவில் உள்ள இந்திய சமூக கிளப் (Indian Social Club in Fujairah)
- BLS ராஸ் அல் கைமா ( BLS Ras Al Khaimah)
- அஜ்மான் இந்திய சங்கம் (Ajman Indian Association)
- உம் அல் குவைனில் கிங் பைசல் சாலையில் உள்ள அல் அப்துல் லத்தீப் அல் ஸரூனி கட்டிடம் (Al Abdul Lathif Al Zarooni Building on King Faizal Road in Umm Al Quwain)
அனைத்து மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. விதிவிலக்காக அல் கலீஜ் மையம் மட்டும், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமேலும், சான்றளிப்பு சேவைகளுக்கு, விண்ணப்பதாரர்கள் துபாயின் ஆட் மேத்தாவில் உள்ள ஐவிஎஸ் குளோபல் அலுவலகங்களை (IVS Global offices in Oud Mehta, Dubai) காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advisory on Passport/Attestation services w.e.f 27 May 2020. pic.twitter.com/eZvUSRJeAP
— India in Dubai (@cgidubai) May 26, 2020