துபாய் : கிரீக் பார்க், குரானிக் பார்க் உட்பட முக்கிய பூங்காக்கள் இன்று முதல் திறப்பு..!! Dubai Frame ஐ சுற்றிபார்ப்பதற்கும் அனுமதி..!!

கொரோனாவின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவந்த இயக்க கட்டுப்பாடுகள், பொது இடங்கள் மீதான தடை, பொது போக்குவரத்து மீதான தடை என அனைத்தும் படிப்படியாக விளக்கிக்கொள்ளப்பட்டு வருவதை தொடர்ந்து தற்போது துபாயில் இருக்கக்கூடிய முக்கிய பூங்காக்கள் மீதான தடையும் தளர்த்தப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படுவதாக துபாய் முனிசிபாலிடி அறிவித்துள்ளது.
துபாய் கிரீக் பார்க், குரானிக் பார்க் உள்ளிட்ட முக்கிய பூங்காக்களும், துபாயில் இருக்கக்கூடிய சுற்றுலா தளங்களில் ஒன்றான துபாய் ஃபிரேம் ஆகியவைகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட இருப்பதாக துபாய் முனிசிபாலிட்டி இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து கடந்த சில மாதங்களாக துபாயின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் அனைத்து பூங்காக்களும் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் அனைவரும், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் எனவும், துபாய் முனிசிபாலிடியின் சார்பாக ஒட்டப்பட்டுள்ள சமூக இடைவெளிக்கான ஸ்டிக்கர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பு பலகைகளை பின்தொடரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூங்காக்களை தவிர்த்து துபாயில் இருக்கக்கூடிய ஜூமைரா பீச், மம்சார் பீச், JBR பீச் உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளையும் இன்று முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Dubai Municipality stresses on adherence to precautionary measures while visiting parks. @DMunicipality pic.twitter.com/AuvS9e4OKB
— Dubai Media Office (@DXBMediaOffice) May 28, 2020