வளைகுடா செய்திகள்

சவூதி அரேபியாவில் மீண்டும் செயல்பட தொடங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்கள்

சவூதி அரேபியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் VFS குளோபல் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்ப மையங்களானது வரும் ஜூன் மாதம் 3 ம் தேதி முதல் தூதரக சேவைகளை வழங்கத் தொடங்கும் என ஜித்தாவில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதியில் இருக்கும் ஜித்தா, தபுக், யான்பு மற்றும் அபாவில் உள்ள மையங்கள் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை தொடங்கும் நாள்

ஜித்தா – ஜூன் 3 முதல்
தபுக் – ஜூன் 7 முதல்
அபா – ஜூன் 7 முதல்
யான்பு – ஜூன் 7 முதல்

ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் செய்திக்குறிப்பில், சவூதி அதிகாரிகள் தனியார் துறை நிறுவனங்களுக்கு ஊரடங்கு உத்தரவுகளை ஓரளவு தளர்த்துவதாக அறிவித்ததன் அடிப்படையில் இந்த சேவைகாளானது மீண்டும் தொடங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. பாஸ்போர்ட் ஏற்கனவே காலாவதியானது அல்லது விரைவில் காலாவதியாகும் மற்றும் அவசர பயண தேவையுள்ளவர்கள் அல்லது இகாமா (ரெசிடென்சி பெர்மிட்) புதுப்பிக்க வேண்டியவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும், கூட்டத்தைத் தவிர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஸ்போர்ட் அல்லது சான்றளிப்பு தொடர்பான சேவைகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான அப்பாயிண்ட்மென்ட் கட்டாயமானது என்றும் உறுதிப்படுத்தப்பட்ட அப்பாயிண்ட்மென்ட் இல்லாமல் எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் சேவைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாயிண்ட்மென்ட் பெறுவதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையோ அல்லது கால் சென்டர் (920006139) என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட் பெறும் விண்ணப்பதாரர் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் முக கவசம் இல்லாத எந்தவொரு விண்ணப்பதாரரும் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..


விண்ணப்பதாரர்கள் சவுதி அரசாங்கத்தின் சுகாதார நெறிமுறைக்கு இணங்கவும், மையத்தில் கூட்டத்தைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

ஒவ்வொரு விண்ணப்பதாரரின் உடல் வெப்பநிலை மையத்திற்குள் நுழைவதற்கு முன்னர் சரிபார்க்கப்படும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது. எனவே கொரோனாவிற்கான நோய் அறிகுறிகள் உள்ள விண்ணப்பதாரர்கள் தூதரக சேவைகளைப் பெற மையங்களுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதே போல், சவூதி அரேபியாவில் இருக்கும் பல்வேறு நகரங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் சேவைகளை மீண்டும் வழங்கவுள்ளதாக சவூதி அரேபியாவில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

பாஸ்போர்ட் சேவைகளை வழங்கும் மையங்களின் வேலை நேரங்களையும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அதன் படி, ரியாத்திலுள்ள உம் அல் ஹமாம், றியாட்டத்திலுள்ள பத்தா, அல் கோபர், தமாம், ஜுபைல், புரைதா மாறும் ஹைல் போன்ற பாஸ்போர்ட் சேவை மையங்கள் சனிக்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை காலை 8 30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை தொடங்கும் நாள்

ரியாத் – உம் அல் ஹமாம் – ஜூன் 3 முதல்
ரியாத் – பத்தா – ஜூன் 3 முதல் ஜூன் 15 வரை
அல் கோபர் – ஜூன் 3 முதல் ஜூன் 15 வரை
தமாம் – ஜூன் 7 முதல்
ஜுபைல் – ஜூன் 7 முதல்
புரைதா – ஜூன் 7 முதல்
ஹைல் – ஜூன் 7 முதல்

சேவைகளை பெற முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்றும் முன் அனுமதி பெறுவதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையோ அல்லது கால் சென்டர் (தொலைபேசி எண் 920006139) என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் ஏற்கனவே காலாவதியானது அல்லது விரைவில் காலாவதியாகும் மற்றும் அவசர பயண தேவையுள்ளவர்கள் அல்லது இகாமா (ரெசிடென்சி பெர்மிட்) புதுப்பிக்க வேண்டியவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சவுதி அரசாங்கத்தின் சுகாதார நெறிமுறைக்கு இணங்கவும், மையத்தில் கூட்டத்தைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுவதாக தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!