அமீரக செய்திகள்

கொரோனா சிகிச்சை மையங்களிலிருந்து நோயாளிகளை வெளியேற்ற இரண்டாவது பரிசோதனை தேவையில்லை..!! புதிய வழிமுறைகள் வெளியிட்ட DHA..!!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தும் மையங்களில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை தொடர்பான நடைமுறைகளில் திருத்தும் செய்யப்பட்டு புதிய வழிகாட்டுதல்களை துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதலின் படி, கொரோனாவிற்கான முதல் பரிசோதனையில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கவைக்கப்படும் நோயாளிகளில், 14 நாட்கள் நிறைவு செய்தவர்கள் மற்றும் கொரோனாவிற்கான அறிகுறியற்றவர்கள் அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டவர்கள், கொரோனாவிற்கான இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளாமலேயே தனிமைப்படுத்தும் மையங்களில் இருந்து வெளியேற முடியும் என்று கூறியுள்ளது.

இதற்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 14 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக இரண்டு மறுபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இரண்டு பரிசோதனையிலும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே தனிமைப்படுத்தும் மையங்களிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தனிமைப்படுத்தும் மையங்களில் இருந்து நோயாளிகளை அனுப்பி வைப்பதற்கு பின்பற்றவேண்டிய சில நிபந்தனைகளையும் துபாய் சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

அதாவது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் நிறைவு பெறுவதும் இதில் அடங்கும். எனினும் 14 நாட்களை தனிமைப்படுத்தும் மையங்களிலேயே நிறைவு செய்ய தேவையில்லை என கூறியுள்ளது. அதாவது கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட முதல் நாளிலிருந்தோ அல்லது கொரோனாவிற்கான அறிகுறிகள் தோன்றிய முதல் நாளிலிருந்தோ இந்த 14 நாட்கள் கணக்கிடப்படும் எனவும் DHA விளக்கியுள்ளது. இதனை சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தீர்மானிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

அடுத்ததாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தால் அதாவது, நோயாளிக்கு காய்ச்சல் இல்லை என்றாலோ அல்லது காய்ச்சலைக் குறைக்க எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நோயாளியின் உடல் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ்சிர்கும் குறைவாக இருந்தலோ, அவர்களை தனிமைப்படுத்தும் மையங்களிலிருந்து வெளியேற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த புதிய வழிமுறைகள் சுகாதார துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொருந்தாது என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், PCR முறையிலான கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், மேலும் அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் 24 மணிநேர இடைவெளியில் தொடர்ச்சியாக இரண்டு எதிர்மறையான முடிவுகளை அதாவது, கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் துபாய் சுகாதார ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!