UAE : Tasheel, Tawjeeh உள்ளிட்ட சேவை மையங்களின் வேலை நேரம் மாற்றியமைப்பு..!! MOHRE தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்கொள்ளபட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக மாற்றியமைக்கப்பட்ட பல்வேறு துறைகளின் வேலை நேரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இயக்க கட்டுப்பாடு தளர்வை தொடர்ந்து வேலை நேரங்கள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து அமீரகத்தில் உள்ள மனிதவள மற்றும் எமிரேடிஷன் அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratistion) அதன் அனைத்து சேவை மையங்களின் வேலை நேரத்தை மாற்றியமைத்துள்ளதாக அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எனினும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மனிதவள மற்றும் எமிரேடிஷன் அமைச்சகத்தின் சேவை மையங்களான தஸ்ஹீல் (Tasheel), தத்பீர் (Tadbeer), தவாஃபூக் (Tawafuq) மற்றும் தவ்ஜீஹ் (Tawjeeh) உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் வடிக்கையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
துபாயில் இருக்க கூடிய அனைத்து மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், மற்ற நகரங்களான அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், புஜைரா, ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது. ஷாப்பிங் மால்களில் உள்ள சேவை மையங்கள் மாலை 7 வரை திறந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் மாலை 6 மணி முதல் தேசிய சுத்திகரிப்பு திட்டம் மேற்கொள்ளப்படும் அபுதாபியில் உள்ள முஸாபாஃ உள்ளிட்ட அமீரகத்தின் தொழில்துறை பகுதிகளில் இருக்க கூடிய சேவை மையங்கள் வெள்ளிக்கிழமை தவிர தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும் மனிதவள மற்றும் எமிரேடிஷன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal
Based on the public interest needs, the service centres’ working hours have been adjusted, with full adherence to applying #COVID19 preventive measures. Stay safe! #WeAreCommited #UAE pic.twitter.com/GXjKxfBZ7Q
— MOHRE_UAE وزارة الموارد البشرية والتوطين (@MOHRE_UAE) May 27, 2020