ஓமானிலிருந்து இந்தியாவிற்கு கூடுதல் விமானங்கள்..!! தமிழகத்திற்கு ஒரு விமானம்..!!
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் தற்பொழுது ஓமான் நாட்டிற்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு 4 விமானங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு விமானம் ஓமான் நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் ஜூன் மாதம் 29 ம் தேதி இயக்கப்படவுள்ளதாக ஓமான் நாட்டிற்கான இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. மீதமுள்ள மூன்று விமானங்களும் இந்தியாவின் மற்ற நகரங்களான டெல்லி, மும்பை மற்றும் மங்களூர் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மூன்றாம் கட்ட திட்டத்தில் ஓமானிலிருந்து தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
PRESS RELEASE: Additional flights under Vande Bharat Mission: Phase 3#IndiaFightsCorona #VandeBharatMission pic.twitter.com/S2UZQaCdfM
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) June 22, 2020