ஃபுஜைராவில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறப்பு..!! ஃபுஜைரா மாநகராட்சி அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஃபுஜைராவில் உள்ள அனைத்து பொது கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஃபுஜைரா மாநகராட்சியானது தேசிய அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து ஆலோசித்து கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறப்பதற்கான முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் மற்றும் கையுறைகளை அணிதல், அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்தல் போன்றவற்றை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்குமாறும் ஃபுஜைரா மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் ஜூன் 29 (நாளை) முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில், ஷார்ஜா அரசாங்கமானது ஷார்ஜாவில் உள்ள பூங்காக்கள், சில கடற்கரைகள், குளங்கள் மற்றும் சினிமாக்கள் போன்றவற்றை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்திருந்தது. அதே போல், அபுதாபியிலும் கலாச்சார மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதற்கு முன்னதாக துபாயில், கடந்த மே மாதத்தின் பிற்பகுதியில் இருந்து, கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் போன்ற அனைத்து முக்கியமான பொழுதுபோக்கு இடங்களும் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe