சவூதி அரேபியா : 4-ம் கட்டத்தில் 13 விமானங்கள்..!! தமிழகத்திற்கு பூஜ்ஜியம்..!! கேரளாவிற்கு 11..!!

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்ட விமான சேவைகளுக்கான விபரங்களை சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் இன்று (ஜூன் 27,2020) வெளியிட்டுள்ளது.
நான்காம் கட்ட அட்டவணையின்படி, ஜூலை 3 ம் தேதி முதல் இயக்கப்படவுள்ள 13 விமானங்களில் 11 விமானங்கள் கேரளாவிற்கும் 2 விமானங்கள் டெல்லிக்கும் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் இருக்கும் தமிழர்கள் பலரும் வந்தே பாரத் திட்டத்தின் அடுத்த கட்டத்திலாவது தமிழகத்திற்கு அதிக விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்திருந்து காத்திருந்த நிலையில் ஒரு விமானம் கூட அறிவிக்கப்படாதது சவூதி அரேபியாவிலிருக்கும் தமிழர்களை பெரும் வருத்தத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ளது.
அந்நாட்டில் பல தமிழர்கள் தங்கள் வேலையை இழந்தும் வருமானமின்றியும் தவித்து வரும் நிலையில், நான்காம் கட்டத்தில் ஒரு விமானம் கூட தமிழகத்திற்கு ஒதுக்கப்படாதது சவூதி வாழ் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Phase 4 of #VandeBharatMission to repatriate stranded Indians from Saudi Arabia pic.twitter.com/VYp0HCB9LJ
— India in SaudiArabia (@IndianEmbRiyadh) June 27, 2020