வளைகுடா செய்திகள்

குடியிருப்பாளர்கள் கத்தார் திரும்ப அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்..!! 14 நாட்கள் ஹோட்டலில் தங்க முன்பதிவு அவசியம்..!!

கத்தார் நாட்டில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் பயண கட்டுப்பாடுகள் நன்கு கட்டங்களாக தளர்த்தப்பட இருப்பதாகவும், இந்த தளர்வுகள் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அண்மையில் கத்தார் அரசு செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த அறிவிப்பில், மூன்றாம் கட்ட தளர்வின் போது கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்திருக்கும் நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், அந்த நாடுகளிலிருந்து கத்தார் நாட்டிற்கு திரும்பி வர கத்தார் நாட்டு குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அவ்வாறு கத்தாருக்கு திரும்பி வரும் குடியிருப்பாளர்கள் தங்களின் சொந்த செலவில் கத்தார் அரசால் அனுமதி அளிக்கப்பட்ட ஹோட்டல்களில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.

இந்த நடைமுறை கத்தார் ஏர்வேஸின் இலக்கு மேலாண்மை பிரிவும், தேசிய சுற்றுலா கவுன்சிலின் பார்ட்னருமான “டிஸ்கவர் கத்தார்” மூலம் செயல்படுத்தப்படும் எனவும் கத்தார் அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கத்தார் நாட்டுக்குள் நுழைந்தவர்களில் யார் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும்?

கத்தார் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என அனைவரும் நாட்டிற்குள் வந்த பின் 14 நாட்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்குள் செல்ல வேண்டும்.

ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை கத்தார் திரும்பும் கத்தார் நாட்டு குடிமக்கள்..
  • இந்த இடைப்பட்ட காலத்திற்குள் கத்தார் நாட்டு குடிமக்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
  • அவ்வாறு வரும் அந்நாட்டு குடிமக்களுக்கு, உறுதிப்படுத்தப்பட்ட விமான டிக்கெட் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஹோட்டல் முன்பதிவு தேவைப்படும்.
  • 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கான கட்டணத்தை பயணம் மேற்கொள்பவரே செலுத்த வேண்டும்.

ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை முதல் டிஸ்கவர் கத்தார் வலைதளத்தின் மூலம் இந்த பேக்கேஜ் விற்பனைக்கு வரும் என்பதும், கத்தாருக்கு வந்து இறங்கிய பின்னரும் கூட HIA மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை கத்தார் திரும்பும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்..
  • இந்த இடைப்பட்ட காலத்திற்குள் கத்தார் நாட்டு குடிமக்கள் மற்றும் செல்லுபடியாகும் QID வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
  • பயணம் மேற்கொள்வதற்கு உறுதிப்படுத்தப்பட்ட விமான டிக்கெட் மற்றும் டிஸ்கவர் கத்தார் வலைதளத்தின் மூலம் தனிமைப்படுத்தலுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஹோட்டல் முன்பதிவு தேவைப்படும்.
  • 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கான பேக்கேஜ்ஜை உறுதிப்படுத்தாமல் கத்தார் செல்லும் விமானத்தில் பயணிக்க முடியாது.
  • 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கான கட்டணத்தை பயணம் மேற்கொள்பவரே செலுத்த வேண்டும்.
ஆகஸ்ட் 31 க்கு பிறகு கத்தார் திரும்பும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்..

நான்காவது கட்ட தளர்வில் கத்தார் திரும்ப திட்டமிடும் குடியிருப்பாளர்களுக்கு தனிமைப்படுத்தல் தொடர்பான விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வாய்ப்பிருப்பதால், பயணத் திட்டங்களை உறுதிப்படுத்துவதற்கு முன்னர் கத்தார் அரசின் மறு அறிவிப்பிற்க்காக காத்திருக்குமாறு டிஸ்கவர் கத்தார் பரிந்துரைத்துள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தலில் உட்படுத்திக்கொள்ள முடியுமா?

பொது சுகாதார அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களில் மட்டுமே 14 நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி இல்லை.

கத்தார் ஏர்வேஸைத் தவிர வேறு விமான நிறுவனத்தில் பயணிக்க முடியுமா?

குடிமக்களும் குடியிருப்பாளர்களும் கத்தார் நாட்டிற்குள் நுழைவதற்கு பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள நிபந்தனைகளுடன், வேறு ஒரு விமான நிறுவனத்தின் மூலமும் கத்தார் நாட்டிற்குள் திரும்பலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!